இந்த
ஆண்டு இறுதிக்குள் CET தகுதித் தேர்வு 12 மொழிகளில் நடத்தப்படும்
இந்த ஆண்டு முதல் நான்–கெஜடட் பிரிவில் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பொதுவான தகுதித் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் நான்–கெஜடட் பிரிவில் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான பொதுவான தகுதித் தேர்வு (CET) நடைபெறும்
என்று மத்திய ஜிதேந்திர சிங், கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி நார்த் பிளாக்கில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம், இந்திய பொது நிர்வாக நிறுவனம், சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் நிறுவனம், கிரித் கல்யாண் கேந்திராக்கள், குடிமைப்பணி சேவைகள் கலாச்சார, விளையாட்டு மத்திய வாரியம் ஆகிய ஆறு தன்னாட்சி அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த அமைச்சர், துறையின் கீழ் உள்ள தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA) கணினி
அடிப்படையிலான ஆன்லைன் பொது தகுதித் தேர்வை நடத்தத் தயாராகி வருகிறது.
ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையத்தைக் கொண்டு, வேலை தேடுபவர்களுக்கு எளிதாக பணியமர்த்தும் திட்டமாக இது இருக்கும் என்று கூறினார்.
முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


