TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கரூர்: ‘ஆடு, கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் வரும், 28-ல் நடக்கிறது’ என, பண்டுதகாரன் புதுாரில் உள்ள கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 28ல் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடக்கிறது.இதில், ஆடு மற்றும் கோழி வளர்ப்பில் முக்கிய பங்களிக்கும் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்வது, பண்ணை வீட்டமைப்பு, தீவன மேலாண்மை, கால்நடை மற்றும் கோழிகளை தாக்கும் நோய், அவற்றை தடுக்கும் முறை, மூலிகை மருத்துவ சிகிச்சை முறை, விற்பனை உத்திகள், வங்கி கடன் உதவி, பண்ணைக்கான காப்பீடு, பண்ணை பொருளாதாரம் போன்ற தலைப்பு குறித்து பல்கலை பேராசிரியர்களால் விளக்கப்பட உள்ளது.
பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


