TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
அரசு தொழில்
பயிற்சி நிலையங்களில் சேர
விண்ணப்பிக்கலாம் – விழுப்புரம்
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு
தொழில் பயிற்சி நிலையம்,
அரசு உதவி பெறும்
மற்றும் தனியார் தொழில்
பயிற்சி நிலையங்களின் அரசு
ஒதுக்கீட்டு இடங்களில் 2022ம்
ஆண்டு பயிற்சியில் சேர
இணையதளம் மூலம் பத்தாம்
வகுப்பு, எட்டாம் வகுப்பு
தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும்
கலந்தாய்வு குறித்த விவரங்கள்
கடைசி தேதிக்குப் பிறகு
இணையதளத்தில் வெளியிடப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு
தொழில் பயிற்சி நிலையம்
திண்டிவனம் மற்றும் தனியார்
தொழில் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
மேலும்,
அரசு, தனியார் தொழில்
பயிற்சி நிலையங்களில் உள்ள
தொழிற் பிரிவு விவரங்கள்
அறிய இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பதாரா்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது தங்களது
அசல் ஆவணங்களான மாற்றுச்
சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்,
ஜாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவை
பதிவேற்றம் செய்யலாம்.
மாணவா்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம்,
மூடு காலணி (ஷூ),
சீருடை, வரைபடக் கருவிகள்,
இலவச பேருந்து பயண
அட்டை ஆகியவை வழங்கப்படும்.
மேலும்,
பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியுடன் உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி
முடித்தவா்களுக்கு பிரபல
தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும்.
மேலும்
விவரங்களுக்கு 9380114610,
8072217350, 9789695190 என்ற கைப்பேசி
எண்களில் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


