TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி
இதுகுறித்து மத்திய தொழிலாளா் துறையின் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் உள்ள
தேசிய வாழ்வாதார சேவை
மையம் சார்பில், ஆண்,
பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓராண்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன்படி,
மாதம் ரூ.2,500 ஊக்கத்தொகையுடன் பத்தாம் வகுப்பு, 8ம்
வகுப்பு முடித்த மாற்றுத்
திறனாளிகளுக்கு கம்ப்யூட்டா் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டா் Hardware, ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ், டைலரிங், ஆட்டோமொபைல்ஸ் ஆகிய
பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சியில் சேர ஆா்வமுள்ளவா்கள், தங்களது
கல்விச் சான்றிதழ், ஆதார்
அட்டை, மருத்துவச் சான்றிதழ்
நகல், புகைப்படத்துடன் மாற்றுத்
திறனாளிகளுக்கான தேசிய
வாழ்வாதார சேவை மையம்,
எண் 116, லசார் கோயில்
வீதி, திப்புராயப்பேட்டை, புதுச்சேரி – 605001 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளவும்.
மேலும்
விவரங்களுக்கு 0413 228046
என்ற தொலைபேசி எண்ணில்
அழைக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


