TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
நில ஆவணம்
சான்று சமர்ப்பித்தால் கவுரவ
ஊக்கத்தொகை பெறலாம்
நில
ஆவணம் உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்து, பிரதமரின்
கவுரவ ஊக்கத்தொகை பெறலாம்
என, வேளாண்துறை அழைப்பு
விடுத்துள்ளது.
பிரதமரின்
கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.விவசாயிகள், விண்ணப்பம் அளித்ததன்
அடிப்படையில், சில
ஆண்டுகளாக, கவுரவ ஊக்கத்தொகை, மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
அவசரகதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதால், விவசாய நிலம் இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்களும், இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.அதனை
தொடர்ந்து, ஆண்டுதோறும் பயனாளிகள்
பட்டியல், மீண்டும் சரிபார்த்து, ஊக்கத்தொகை விடுவிக்கப்படுகிறது.இந்தாண்டும், விவசாயிகள் விபரம் சரிபார்க்கப்படுவதால், விவசாயிகள் உரிய
சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டுமென, வேளாண்துறை அறிவித்துள்ளது.
சிட்டா,
ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு
போட்டோ போன்ற ஆவணங்களை,
வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமென, அறிவிப்பு செய்யப்
பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட
அனைத்து ஒன்றியங்களைச்சேர்ந்த விவசாயிகளும், தங்கள் நில ஆவணம்
தொடர்பான சான்றிதழ்களை, வேளாண்
அலுவலர்களிடம் வழங்கி,
அடுத்த தவணை ஊக்கத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here