வெளிநாட்டு மருத்துவ
மாணவர்களுக்கு 2 ஆண்டு
மருத்துவ பயிற்சி கட்டாயம்
ரஷ்யா
– உக்ரைன் போர் காரணமாக
நாடு திரும்பிய இறுதியாண்டு மருத்துவ மாணவ – மாணவியர்,
இரண்டு ஆண்டுகள் மருத்துவ
பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள
வேண்டும் என, என்.எம்.சி.,
எனப்படும் தேசிய மருத்துவ
கமிஷன் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடிந்து
வரும் இந்திய மாணவர்கள்,
இங்கு நடைபெறும் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். பின், மருத்துவ
கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லுாரி
மருத்துவமனையில், ஓராண்டு
பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு
பயிற்சி முடித்த மாணவ,
மாணவியர் மட்டுமே டாக்டராக
பதிவு செய்ய முடியும்.இந்நிலையில், கொரோனா பரவல் மற்றும்
உக்ரைன் – ரஷ்யா போர்
ஆகிய காரணங்களால் நாடு
திரும்பிய இறுதியாண்டு மருத்துவ
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
தங்களது
படிப்பை நம் நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய
வேண்டும் என மாணவர்கள்
கோரிக்கை விடுத்தனர். அது
ஏற்கப்படவில்லை.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள்
சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்
பட்டது.
ஏப்.,
29ல் மனுவை விசாரித்த
உச்ச நீதிமன்றம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு
நல்ல முடிவை எடுக்க
என்.எம்.சி.,யை
வலியுறுத்தியது.இந்நிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக
என்.எம்.சி.,
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெளிநாடுகளில், இறுதியாண்டு மருத்துவ தேர்வை
எழுத முடியாதவர்கள், எப்.எம்.ஜி.,
எனப்படும் வெளிநாட்டு மருத்துவ
பட்டதாரி தேர்வில் பங்கேற்க
அனுமதிக்கப்படுவர்.
ஆனால்,
தேர்வில் வெற்றி பெறுவோர்,
ஏற்கனவே, நடைமுறையில் உள்ள
ஓராண்டு மருத்துவ பயிற்சிக்குப் பதிலாக இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு ஆண்டு பயிற்சியை
முடித்தவர்கள் மட்டுமே
டாக்டராக பதிவு செய்ய
தகுதிஉடையவர்கள்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here