TAMIL MIXER EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிய 30 ஆயிரம் ரூபாயாக
கட்டணம் குறைப்பு
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள்
தமிழ்நாட்டில் பயிற்சி
மருத்துவராக பணிபுரிய எம்.ஜி.ஆர்.
மருத்துவ பல்கலைக்கு 3.20 லட்சம்
ரூபாயும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு இரண்டு லட்சம்
ரூபாயும் கட்டணம் செலுத்த
வேண்டியிருந்தது.
மாணவர்களால் அந்த கட்டணத்தை செலுத்த
முடியவில்லை என முதல்வரிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர்களுக்கான கட்டணம்
வெறும் 30 ஆயிரம் ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி
மருத்துவராக பணியாற்ற 7.5 சதவீத
இட ஒதுக்கீடு மட்டுமே
இருந்தது. இதனால் கிராமப்புற மாணவர்கள் நிறைய பேர்
பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டி இருந்தது.இந்த
ஒதுக்கீட்டை 20 சதவீதமாக அதிகரிக்க
வேண்டும் என தமிழக
அரசு தேசிய மருத்துவ
கவுன்சிலிடம் கோரியது;
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால்
வெளிநாட்டில் படித்த
மருத்துவ மாணவர்கள் 1881 பேர் தமிழகத்தில் புதிதாக
துவங்கப்பட்டுள்ள 11 மருத்துவமனைகளில் பயிற்சி பெறும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில்
இருந்து நாடு திரும்பிய
மருத்துவ மாணவர்களுக்கு வேறு
வெளிநாடுகளில் படிக்க
வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக
மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


