Thursday, August 14, 2025
HomeBlogநாட்டுக் கோழி பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக் கோழி பண்ணை அமைக்க மானியம்

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்

நாட்டுக் கோழி
பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக்
கோழிகளை வளா்ப்பதில் திறன்
கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ
50
சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாட்டுக்கோழிகளை வளா்ப்பதில் திறன் கொண்ட
கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய
அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ
50
சதவீத மானியம் வழங்கும்
திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் நகல்
சமா்ப்பிக்க வேண்டும். கோழி
வளா்ப்பில் ஆா்வம் உள்ள
மற்றும் நாட்டுக் கோழி
வளா்ப்பதில் திறன் கொண்ட
கிராமப்புற பயனாளிகளாக இருத்தல்
வேண்டும். பயனாளிகளுக்கு கோழிக்
கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர
அடி நிலம் சொந்தமாக
இருத்தல் வேண்டும்.

இந்தப்பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி
இருக்க வேண்டும். பண்ணைஅமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா,
அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல்
வேண்டும்.

விதவைகள்,
ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீத தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சோந்தவராக இருத்தல்
வேண்டும். 2012 -2013 முதல்
2017-2018
வரையிலான கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் 2020-2021ம்
ஆண்டிற்கான தேசிய வேளாண்
அபிவிருத்தி திட்டத்தின் கீழ்
நாட்டுக்கோழி வளா்ப்பில் தொழில் முனைவோர் ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பயனாளி
பயனடைந்து இருக்கக்கூடாது. அதற்கான
சான்றிதழ் வழங்க வேண்டும்.

தேர்வு
செய்யப்படும் பயனாளி
3
ஆண்டுகளுக்கு குறையாமல்
பண்ணையை பராமரித்திட உறுதி
அளித்திடல் வேண்டும். தேசிய
மயமாக்கப்பட்ட வங்கி,
கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க
வேண்டும் அல்லது பயனாளி
சொந்தமாக முதலீடு செய்ய
முன்வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி திறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கோழி
வளா்ப்பு மற்றும் மேலாண்மை
குறித்த 3 நாள்கள் பயிற்சி
வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை
மருந்தகத்தின் கால்நடை
உதவி மருத்துவா்களை அணுகி
விண்ணப்பங்களை பெற்று
வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments