TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
50 சதவீத மானியத்தில் தோட்டக்கலைப் பயிரினை
பெற விண்ணப்பிக்கலாம் – சிவகங்கை
இதுகுறித்து சிவகங்கை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
சார்பில் தோட்டக்கலைப் பயிர்
சாகுபடியில் உற்பத்தியை பெருக்க
பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தோட்டக்கலைப் பயிர்களில் வீரிய ஒட்டு ரக
காய்கனிகளான தக்காளி, கத்தரி,
மிளகாய், மா, கொய்யா,
பப்பாளி, அத்தி, டிராகன்
பழம், பலா, நெல்லி,
முந்திரி, மல்லிகை, மற்றும்
கிழங்கு வகை பூக்கள்
ஆகியவற்றினை பயன்படுத்தி புதிய
தோட்டங்கள் அமைப்பதற்கு நாற்றுகள்
மற்றும் பழச்செடிகள் அரசு
தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி
செய்யப்பட்டு 50 சதவீதம்
மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மேலும்,
மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயிர்
ஊக்கத்தொகை இடுபொருள் மானியமாக
ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம்
வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட
திட்டங்களில் பயன்பெற
விரும்பும் சிவகங்கை வட்டாரத்தைச் சோந்த விவசாயிகள் கணினி
சிட்டா, அடங்கல், குடும்ப
அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், நில
வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு
புகைப்படங்கள், மண்
மற்றும் நீா் பரிசோதனை
அட்டை, வங்கி கணக்கு
புத்தக நகல் ஆகிய
ஆவணங்களுடன் தோட்டக்கலை துறை
இணையதளத்தில் பதிவு
செய்து கொள்ளலாம்.
மேலும்,
சிவகங்கையில் உள்ள
வட்டார தோட்டக்கலை உதவி
இயக்குநா் அலுவலகத்தை நேரடியாக
தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


