அக்னிவீா் திட்டத்திற்கான இலவச பயிற்சி முகாம்
அக்னிவீா்
– 2022 திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவதற்கான இலவச பயிற்சி
முகாம் ராசிபுரம் அருகே
உள்ள மசக்காளிபட்டியல் ஆகஸ்ட்
17ல் துவங்கி நடைபெறும்
என பாஜக நாமக்கல்
மாவட்ட முன்னாள் ராணுவப்
பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பாஜக மத்திய திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவா் தெரிவித்துள்ளதாவது:
அக்னிவீா்
– 2022 திட்டத்திற்கான இலவசப்
பயிற்சி முகாம் ராசிபுரம்
அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை கஸ்தூரிபா
காந்தி கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 17 துவங்கி 28ஆம்
தேதி வரை நடைபெறும்.
இந்த
முகாமில் லெப்டினனட் என்.கே.ராமன்,
மேஜா் மதன்குமார் ஆகியோர்
பங்கேற்று பயிற்சி, ஆலோசனை
வழங்குகின்றனா். பயிற்சியின்போது ஆதார் அட்டை நகல்,
பாஸ்போர்ட் புகைப்படம், நோட்டு,
பேனா, பென்சில், ரப்பா்
தங்குவதற்குத் தேவையான
பொருட்கள் கொண்டுவர வேண்டும்.
ராணுவத்தில் சோவதற்கான கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு தோச்சி
ஆகும். விமானப்படைக்கு 12ம்
வகுப்பு தோச்சி அவசியம்.
17.5 வயதிற்கு மேற்பட்டு 23 வயது
வரை உள்ளவா்கள் இதில்
பங்கேற்கலாம்.
உயரம்
166 செ.மீ. இருக்க
வேண்டும். மருத்துவச்சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ், என்சிசி சான்றிதழ்
இருப்பின் கூடுதல் தகுதியாகும். ஆண், பெண் இருவருக்கும் தங்கும் இடவசதி உள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow