HomeBlogTNPSC Group 5A தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

TNPSC Group 5A தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Apply for TNPSC Group 5A Exam

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்

TNPSC Group
5A
தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

TNPSC
Group 5A தேர்வுக்கு வருகிற
21
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். தேர்வானது
டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழக
அரசின் பல்வேறு துறைகளில்
உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வு
ஆணையத்தால் அறிவிப்பு வெளியிட்டு நிரப்பப்படுகின்றன.

ஆண்டுதோறும் இதற்கான கால அட்டவணை
வெளியிடும் TNPSC குரூப்
1,
குரூப் 2, 2 , குரூப்
4
உள்பட பல்வேறு வகையான
தேர்வுகளை நடத்துகிறது.

அரசு
வேலை பல இளைஞரது
கனவுகள் என்பதால், டி.என்.பி.எஸ்.சி
நடத்தும் இத்தகைய தேர்வுகளுக்கு லட்சககணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அண்மையில் நடந்த
குரூப் 4 தேர்வுகளைக் கூட
சுமார் 20 லட்சம் பேர்
எழுதியிருந்தனர்.

பெரும்
திருவிழா கூட்டம் போல
தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள்
படையெடுத்தனர். இந்த
நிலையில், தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர்
உள்ளிட்ட பதவிகளில் காலியாக
உள்ள 161 இடங்களை நிரப்புவதற்கு குரூப் 5
தேர்வு நடத்தப்படும் என்று
கடந்த மாதம் 23 ஆம்
தேதி அறிவிப்பு வெளியானது.

சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் சட்டம்
மற்றும் நிதிசாராத பிரிவு
உதவி அலுவலர் பதவிக்கு
74
காலியிடங்கள் உள்ளன.
நிதிப் பிரிவு உதவி
அலுவலர் பணியிடங்களுக்கு 29 காலியிடங்கள் உள்ளன.

சட்டம்
மற்றும் நிதி சாராத
உதவியாளர் பதவிக்கு 49 காலியிடங்களூம் நிதி உதவியாளர் பதவிக்கு
9
காலியிடங்களையும் நிரப்ப
TNPSC அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் அந்தந்த
பிரிவினருக்கு ஒதுக்கப்படும் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நிதி சாராத
பிரிவு உதவி அலுவலர்
மற்றும் நிதி பிரிவு
உதவி அலுவலர் பணிகளுக்கு ஊதியமாக ரூ 36,400 முதல்
ரூ 1,34,200 வரை
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிதி
மற்றும் நிதிசாராத உதவியாளர்
பணியிடத்திற்கும் நிதி
உதவியாளர் பணியிடத்திற்கும் ஊதியமாக
ரூ 20 ஆயிரம் முதல்
ரூ.73,700 வரை என்ற
அளவில் இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த
தேர்வு அறிவிப்பு வெளியானது
முதல் தேர்வர்கள் ஆர்வமாக
விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 21ம் தேதிதான்
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி
நாளாகும். டிசம்பர் 18ம்
தேதி தேர்வு நடைபெறும்.
காலை மாலை என
இருவேளைகளிலும் தேர்வு
நடைபெறும். காலை 9.30 மணி
முதல் நண்பகல் 12.30 மணி
வரை 100 மதிப்பெண்களுக்கு பொது
தமிழ் தாளுக்கும், மதியம்
2
மணி முதல் 5 மணி
வரை 100 மதிப்பெண்களுக்கு பொது
ஆங்கிலம் தாளுக்கும் தேர்வு
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு
முடிவுகள் 2023 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதத்தில் வெளியிட
TNPSC திட்டமிட்டுள்ளது. தேர்வு
தொடர்பான முழு விவரங்கள்
அடங்கிய அறிவிப்பாணை www.tnpsc.gov.in என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!