திருச்சி கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெறும் வெண்பன்றி வளா்ப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மையத்தின் தலைவா் வே. ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி, கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில் செப்.7-ஆம் தேதி இலவச வெண்பன்றி வளா்ப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், சுய தொழில் தொடங்க விருப்பமுள்ளோா், தொழில் முனைவோா் பங்கேற்கலாம்.
விருப்பமுள்ளோா் பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகியும் பங்கேற்கலாம். 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் பதிவு செய்யலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


