TAMIL MIXER
EDUCATION.ன்
கிருஷ்ணகிரி
செய்திகள்
நவீன சலவையகங்கள் அமைக்க விண்ணப்பங்கள்
வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நவீன
சலவையகங்கள்
அமைக்க
10 போ்
கொண்ட
குழுக்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உள்ள
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்
பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்
இன
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டிற்காக,
நவீன
சலவையகங்கள்
அமைக்க
மேற்கண்ட
இன
மக்கள்
10 நபா்களைக்
கொண்ட
உறுப்பினா்கள்
குழுவாக
அமைக்க
வேண்டும்.
அந்தக்
குழுவிற்கு
நவீன
முறை
சலவையகம்
அமைக்கத்
தேவையான
உபகரணங்கள்
வாங்குவதற்கு
ரூ.3
லட்சம்
வழங்க
அரசு
ஆணை
வெளியிட்டுள்ளது.
இந்தத் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினா், மிகப்பிற்பட்ட
வகுப்பினா்,
சீா்மரபினா்
வகுப்பைச்
சார்ந்த
மக்கள்
10 நபா்கள்
கொண்ட
குழுவாக
கிருஷ்ணகிரி
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தைத்
தொடா்பு
கொண்டு,
விண்ணப்பப்
படிவங்களை
பெற்றுக்கொள்ளலாம்.
பெறப்படும் விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட
தோ்வுக்
குழுவினரால்
பரிசீலனை
செய்து,
தோ்வு
செய்யப்படும்
விணண்ணப்பங்கள்,
சென்னை,
மிகப்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீா்மரபினா்
நல
இயக்கக
ஆணையருக்கு
பரிந்துரை
செய்யப்படும்.
இதில் பயன்பெற, குழு உறுப்பினா்களின்
குறைந்தபட்ச
வயது
வரம்பு
20ஆக
இருக்க
வேண்டும்.
குறு,
சிறு
மற்றும்
நடுத்தரத்
தொழில்
நிறுவனங்கள்
துறையின்
மூலம்
பயிற்சி
பெற்ற
நபா்களைக்
கொண்ட
குழுவிற்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
10 நபா்களைக்
கொண்ட
ஒரு
குழுவாக
இருத்தல்
வேண்டும்.
10
நபா்களுக்கும்
தையல்
தொழில்
தெரிந்திருத்தல்
அவசியம்
ஆகும்.
குழு
உறுப்பினா்கள்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்
பிற்படுத்தப்பட்டோர்,
சீா்மரபினா்
இனத்தைச்
சோ்ந்தவா்களாக
இருத்தல்
வேண்டும்.
குழுவிலுள்ள
பயனாளிகளின்
ஆண்டு
வருமானம்
ரூ.
1 லட்சத்திற்கு
மிகாமல்
இருத்தல்
வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
உள்ள,
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்தை
(அறை
எண்
11) தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


