TAMIL MIXER
EDUCATION.ன்
விழுப்புரம்
செய்திகள்
வேளாண் திட்டங்களை அறிய உதவும் உழவன் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தல்
அரசின் வேளாண் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிய உதவும் உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உழவன் செயலி மூலம் தற்போது 21 வகையான சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய,
மாநில
அரசுகளின்
மானியத்
திட்டங்களை
அறிந்துகொள்ளும்
வசதி,
தேவையான
இடுபொருள்களை
முன்பதிவு
செய்தல்,
பயிர்க்
காப்பீடு
விவரங்களை
அறிந்துகொள்ளும்
வசதி
இதில்
உள்ளது.
விவசாயிகள் தங்களது குடியிருப்புக்கு
அருகே
உள்ள
தொடக்க
வேளாண்
கூட்டுறவு
கடன்
சங்கம்,
உரக்
கடைகளில்
உள்ள
உரங்களின்
இருப்பு,
விலை
விவரங்களையும்
செயலியில்
அறிந்துகொள்ளலாம்.
இந்த
செயலியில்
வாடகை
இயந்திரங்கள்
பெற
அரசு
மற்றும்
அரசு
உதவிபெறும்
தனியார்
நிறுவனங்களின்
விவரங்களும்
இடம்பெற்றுள்ளன.
மேலும் விவசாயிகள் தங்களது விளை பொருள்களுக்கு
உண்மையான
விலையை
அறிந்து
கொள்ளும்
வசதி,
மாநிலம்
முழுவதும்
உள்ள
அனைத்து
சந்தைகளின்
விலை
விவரம்,
மழையளவு
விவரம்,
அணைகளின்
நீா்மட்டம்,
வேளாண்
செய்திகள்,
உழவா்–அலுவலா் தொடா்புத் திட்டம், அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம்,
கலைஞரின்
அனைத்துக்
கிராம
ஒருங்கிணைந்த
வேளாண்
வளா்ச்சித்
திட்டத்தின்
சிறப்பு,
பயன்கள்
போன்றவை
உழவன்
செயலியில்
உள்ளன.
எனவே
விவசாயிகள்
தங்களது
கைப்பேசியில்
உழவன்
செயலியைப்
பதிவிறக்கம்
செய்து
பயன்பெறலாம்.