தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை 14ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே போட்டித்தேர்வெழுதும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். இத்தகவலை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


