அண்ணா பல்கலைக்கழகம் CARCA மேலாளர் பணி 2026: 2 இடங்கள், நவம்பர் 30 கடைசி நாள்

- கல்வித் தகுதி
- Management முதுகலை + 3 ஆண்டு தொடர்புடைய அனுபவம்
- சம்பளம்
- மாதம் ₹45,000–₹50,000 தொகுப்பூதியம்
- பணியிடம்
- சென்னை, கிண்டி
- கடைசி தேதி
- 30.11.2026
விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
இந்தப் பதிவில்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் நிறுவன உறவுகள் மையத்தில் (CARCA) Manager – Relations & Fundraising பதவிக்கு இரண்டு தற்காலிகப் பணியிடங்கள் உள்ளன. Management முதுகலைப் பட்டமும் தொடர்புடைய துறையில் மூன்று ஆண்டு அனுபவமும் தேவை. விண்ணப்பத்தின் அச்சுப் பிரதி 30 நவம்பர் 2026 மாலை 5 மணிக்குள் மையத்தைச் சென்றடைய வேண்டும்.
பணி விவரங்கள்
| விவரம் | அதிகாரப்பூர்வ தகவல் |
|---|---|
| நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் · Centre for Alumni Relations and Corporate Affairs |
| பதவி | Manager – Relations & Fundraising · 2 இடங்கள் |
| தகுதி | Management முதுகலைப் பட்டம் + தொடர்புடைய துறையில் 3 ஆண்டு அனுபவம் |
| ஊதியம் | மாதம் ₹45,000–₹50,000 தொகுப்பூதியம் |
| பணியிடம் | கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், சென்னை |
| பணிக்காலம் | முதலில் 6 மாதங்கள். பணித்திறன் திருப்திகரமாக இருந்தால் நீட்டிக்கப்படலாம். |
| கடைசி நாள் | 30 நவம்பர் 2026, மாலை 5 மணி |
எந்த அனுபவம் பொருந்தும்?
நிறுவன உறவுகள், நிதி திரட்டல், முன்னாள் மாணவர் உறவுகள் அல்லது நிறுவனக் கூட்டாண்மைகள் போன்ற பணிகளில் தொடர்புடைய அனுபவம் தேவை. நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து CSR நிதி, ஸ்பான்சர்ஷிப், நன்கொடை திரட்டிய அனுபவத்தையும் அறிவிப்பு குறிப்பிடுகிறது. பல்கலைக்கழகத் திட்டங்களுக்கான கூட்டாண்மைகள், நிதி முன்மொழிவுகள் மற்றும் முன்னாள் மாணவர் நிகழ்ச்சிகளைக் கையாள்வது பணியின் பகுதியாகும்.
தேர்வு முறை
விண்ணப்பங்களைப் பரிசீலித்துப் பட்டியலிடப்படும் நபர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நாள் மற்றும் நேரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும். அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பயணப்படி, தினப்படி கிடையாது. வயது வரம்பு, வயதுத் தளர்வு, விண்ணப்பக் கட்டணம் குறித்து அறிவிப்பில் விவரம் தரப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், விண்ணப்பக் கடிதம் மற்றும் தொடர்புடைய கல்வி, அனுபவச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்கவும்.
- அச்சுப் பிரதிகள் 30 நவம்பர் 2026 மாலை 5 மணிக்குள் இந்த முகவரியைச் சென்றடைய வேண்டும். The Director, Centre for Alumni Relations and Corporate Affairs (CARCA), CPDE First Floor, College of Engineering Guindy Campus, Anna University, Chennai – 600025.
10 நவம்பர் 2026 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் (PDF)
அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புப் பட்டியல்
தொடர்புடைய பதிவுகள்
முக்கிய இணைப்புகள்
முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.