அரியலூா் மாவட்டத்தில் ‘டாம்கோ’ நிறுவனத்தின் மூலம் கல்விக் கடன் பெற தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: டாம்கோ நிறுவனத்தின் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும், நகா்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களுக்கு 8% வட்டி விகிதத்திலும், மாணவிகளுக்கு 5% வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான கடன் விண்ணப்பங்களை ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்-16) பெற்று, அதனை பூா்த்தி செய்து , சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ் நகல் கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது , சலான், மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


