HomeNewslatest newsWedding Photography & Video Editing Training 2026 📸 10th Pass-க்கு EDII-TN Govt...

Wedding Photography & Video Editing Training 2026 📸 10th Pass-க்கு EDII-TN Govt Certificate Course!

திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி 2026: EDII-TN மூலம் 5 நாள் Training அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் — EDII-TN மூலம் “திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி” சென்னைல் 5 நாட்கள் நடைபெற உள்ளது.

Photography, Videography, Video Editing துறையில் career அல்லது self-business தொடங்க விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள், job seekers மற்றும் தொழில்முனைவோருக்கு இது நல்ல skill training வாய்ப்பாகும்.

Training Quick Info

விவரம்தகவல்
பயிற்சி பெயர்திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
நிறுவனம்EDII-TN, Government of Tamil Nadu
பயிற்சி நாட்கள்20.07.2026 முதல் 24.07.2026 வரை
நேரம்காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்EDII-TN Campus, Ekkattuthangal, Chennai
தகுதி10th Pass & Above
வயது18 வயதுக்கு மேல்
சான்றிதழ்அரசு சான்றிதழ் வழங்கப்படும்
Contact8668102600 / 7806918309

இந்த பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம்?

இந்த 5 நாள் பயிற்சியில் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் துறைக்கு தேவையான basic முதல் advanced level வரை பயிற்சி வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

குறிப்பாக,

  • திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன?
  • புகைப்படம் எடுத்தலின் வரலாறு
  • Photography அடிப்படைகள்
  • Lighting, Composition, Camera Handling
  • திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் முறைகள்
  • பாரம்பரிய மற்றும் modern wedding photography techniques
  • தேவையான photography equipment அறிமுகம்
  • Video editing basics
  • Wedding album வடிவமைப்பு
  • திருமண புகைப்பட business தொடங்கும் வழிமுறைகள்
  • அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் தொடர்பான தகவல்கள்

போன்ற முக்கியமான விஷயங்கள் கற்றுத்தரப்படும்.

யாரெல்லாம் Apply செய்யலாம்?

இந்த training-க்கு ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் / திருநம்பிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர்:

  • 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
  • குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Photography / Videography / Editing துறையில் ஆர்வம் இருக்க வேண்டும்

பயிற்சியில் பங்கேற்கும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி தேவைக்கு ஏற்ப கிடைக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் இந்த Training முக்கியம்?

திருமண நிகழ்ச்சிகளில் photography மற்றும் videography service-க்கு எப்போதும் தேவை உள்ளது. இன்று candid photography, cinematic video, pre-wedding shoot, album design, reels editing போன்ற சேவைகளுக்கு அதிக demand உள்ளது.

இந்த training மூலம் ஒரு camera அல்லது mobile editing skill-ஐ professional service ஆக மாற்றிக்கொள்ள முடியும். Job opportunity மட்டுமல்லாமல், தனியாக wedding photography business தொடங்கவும் இது உதவும்.

எப்படி Register செய்வது?

பயிற்சியில் சேர விரும்புவோர் www.editn.in என்ற official website மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழே உள்ள numbers-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Contact Numbers: 8668102600 / 7806918309

Address:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
SIDCO Industrial Estate, EDII Office Road,
Ekkattuthangal, Chennai – 600032.

Source: TN DIPR Press Release No. 367, Date: 09.07.2026
Official Website: www.editn.in
DIPR Website: www.dipr.tn.gov.in

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular