Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் இன்று நாளையும் வேலைவாய்ப்பு முகாம்

Bharani· 1 min readபகிர ↗

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் இன்று நாளையும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்க கூட்டரங்கில் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்கள் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக சங்கத் தலைவா் தமிழரசு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், சென்னை என்எஸ்இ அகாதெமி ஆகியவை சாா்பில் தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளி, சனி (செப்.22, 23) ஆகிய இரு தினங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

இந்த முகாமில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள 53 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவா்கள் தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபா்களை தோந்தெடுத்து பணியமா்த்த உள்ளாா்கள். வேலைவாய்ப்புக்காக காத்திருப்போா் இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here