📢 சுற்றுச்சூழலை காப்போம்! பசுமை சாம்பியன் விருது 2026 – விண்ணப்பிக்கலாம் 🌱
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, மாநிலம் முழுவதும் பசுமை நடவடிக்கைகளை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட முக்கிய மாநில அளவிலான பரிசாகும்.
ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் / அமைப்புகள் தேர்வுசெய்யப்படுவர். ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அரசால் வழங்கப்படும்.
🌿 யார் விண்ணப்பிக்கலாம்? (Eligibility)
பின்வரும் துறைகளில் செயல்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிசமான பங்களிப்பு செய்த தனிநபர்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்:
✔️ சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு
✔️ பசுமை தயாரிப்புகள் & பசுமை தொழில்நுட்பம்
✔️ திடக்கழிவு மேலாண்மை
✔️ நீர் & நீர்நிலைகள் பாதுகாப்பு
✔️ காலநிலை மாற்ற தணிப்பு செயல்கள்
✔️ பிளாஸ்டிக் கழிவு குறைப்பும் மறுசுழற்சியும்
✔️ நிலையான வளர்ச்சி திட்டங்கள்
✔️ சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகள்
✔️ புதுமையான எகோ-ப்ராஜெக்ட்கள்
✔️ அறிவியல் ஆராய்ச்சிகள் (Green Technology / Eco Research)
இந்த துறைகளில் உண்மையான, தொடர்ச்சியான, சமூக நல சேவைகள் செய்திருக்க வேண்டும்.
🏛️ தேர்வு செய்யப்படும் முறைகள்
📌 மாவட்ட அளவிலான விருது குழு
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு District Award Committee இயங்கும்.
இந்தக் குழுவே தகுதியான விண்ணப்பங்களை ஆய்வு செய்து முன்னுரிமை பட்டியலை உருவாக்கும்.
📌 இறுதி தேர்வு
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) இறுதி தேர்வை மேற்கொள்ளும்.
📅 விண்ணப்பக்கான கடைசி தேதி?
👉 2026 ஜனவரி 20
அதற்கு முன், உங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிவை (Proposal) சமர்ப்பிக்க வேண்டும்.
📍 விண்ணப்பிக்க வேண்டிய இடம்
உங்கள் மாவட்டத்தில் உள்ள:
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் (District Environmental Engineer Office – TNPCB)
அங்கு நேரடியாக சென்று அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு முழு வழிகாட்டி பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

