TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
ஆதிதிராவிடர்
மாணவர்களுக்கு
ட்ரோன் கருவி
பயிற்சி
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவர்கள்
வேளாண்
துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
கருவி
பயிற்சி
பெற
விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம்
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டுவசதி
மற்றும்
மேம்பாட்டுக்
கழகம்
(தாட்கோ)
நிறுவனமானது
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
இன
மாணவர்களுக்கு
பல்வேறு
திறன்
அடிப்படையிலான
பயிற்சியை
வழங்கி
வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
தற்போது
மெட்ராஸ்
இன்ஸ்டியூட்
ஆப்
டெக்னாலஜி
விவசாயத்
துறையில்
பயன்படுத்தும்
ட்ரோன்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக் கொல்லி நோய் தாக்கப்பட்டால்
குறைந்த
நேரத்தில்
அதிகமான
பரப்பளவில்
25 முதல்
30 ஏக்கர்
வரை
மருந்துகளை
தெளித்து
முடிக்க
முடியும்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
18 முதல்
45 வயது
நிரம்பிய
ஆதிதிராவிடர்,
பழங்குடியின
மாணவர்கள்,
கல்வித்
தகுதியில்
பத்தாம்
வகுப்பு,
ஐ.டி.ஐ., டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்றவர்களும்,
பாஸ்போர்ட்
உரிமை
மற்றும்
மருத்துவரின்
உடல்தகுதி
சான்றிதழ்
சமர்பிக்க
வேண்டும்.பயிற்சிக்கான
கால
அளவு
10 நாட்கள்
ஆகும்.
பயிற்சிக்கான
மொத்த
தொகை
61 ஆயிரத்து
100 ரூபாய்
தாட்கோ
மூலம்
வழங்கப்படும்.பயிற்சியை முடித்தால் அங்கீகரிக்கப்பட்ட
ட்ரோன்
ரிமோட்
பைலட்
உரிமம்
பெறுவார்கள்.
இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு
செல்லதக்கதாகும்.
இப்பயிற்சி
பெற்றவர்கள்
சொந்தமாகவோ
அல்லது
தாட்கோ
நிதியுதவி
மூலமாகவோ
ட்ரோன்
கருவிகளை
வாங்கலாம்.விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு
வேளாண்
துறையில்
உள்ள
மானியம்
மற்றும்
கடன்
திட்டங்கள்
மூலமாகவும்,
அல்லது
தாட்கோவின்
2.25 லட்சம்
ரூபாய்
மானியத்துடன்
வங்கி
கடன்
வழங்க
வழி
வகை
செய்யப்படும்.
இத்திட்டத்தில்
தகுதியுள்ள
ஆதிதிராவிடர்,
பழங்குடியினர்
மற்றும்
திருநங்கைகள்
தாட்கோ
இணையதளமான
www.tahdco.com விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


