
முகலாயர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் உங்களின் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். முகலாயர்கள் ஆட்சியின் வரலாறு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகள் பற்றிய வினா விடைகள் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 300 வினா விடைகள் உங்களுக்கு இந்திய வரலாறு மற்றும் பொதுவான அறிவு பகுதியை உத்தரவாதமாக உயர்த்த உதவும். மேலும், முகலாயர்கள் ஆட்சியின் முக்கிய அம்சங்களை புரிந்துகொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த வினா விடைகளின் சிறப்பம்சங்கள்:
- 📚 முகலாயர்களின் ஆட்சியை பற்றிய விரிவான தகவல்கள்
- 📝 இந்திய வரலாறு மற்றும் பொதுவான அறிவு பகுதிகளில் பயனுள்ள கேள்விகள்
- 🎯 TNPSC, UPSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி
- 💡 முகலாயர்கள் ஆட்சியின் முக்கிய அம்சங்கள்
300 – முகலாயர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்
- இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? ஜாகிருதீன் முகமது பாபர்
- பாபர் தன் தந்தையார் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்? தைமூர்
- பாபர் தன் தாய் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்? தாஷ்கண்ட் சேர்ந்த யூனுஸ் கான்
- பாபர் செங்கிஸ்கானின் எத்தனையாவது தலைமுறை வாரிசு ஆவார்? 13-வது
- பாபர் எப்போது பிறந்தார்? பிப்ரவரி 14,1483
- ஜாகிருதீன் முகமது பாபர் என்றால் பொருள் என்ன? நம்பிக்கையை காப்பவர்
- பாபர் தன்னுடைய எத்தனையாவது வயதில் பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்? 12 வயது
- பாபர் பர்கானாவிலிருந்து யாரால் துரத்தி அடிக்கப்பட்டார்? உஸ்பெக்குகள்
- பாபர் காபூலை எப்போது கைப்பற்றினார்? 1505
- பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி காபூலில் பாபரை சந்தித்தவர்கள் யார்? தெளலத்கான் லோடியின் மகன் தில்வர்கான்,டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம் கான்
- முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த நகரைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது? ஆக்ரா
- 1527 இல் பாபர் யாரை தோற்கடித்தார்? ராணா சங்கா
- பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றவராவார்? துருக்கி பாரசீகம்
- பாபரின் எந்த சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துக்களையும் விலங்குகள் செடிகள் மரங்கள் மலர்கள் கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்? துசுக்-இ- பாபரி
- உமாயூனின் சகோதரர்கள் யார்? கம்ரான்,ஹின்டால், அஸ்காரி
- செளசாமற்றும் கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு எது? 1539, 1540
- செளசா மற்றும் கன்னோசி போரில் ஹுமாயூனைத் தோற்கடித்த அரசர் யார்? ஷேர்ஷா சூர்
- 1555ல் ஹுமாயூனுக்கு டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் உதவியாக இருந்த அரசர் யார்? ஷா- தாமஸ்ப்
- ஷா தாமஸ்ப் எந்த நாட்டு அரசர்? பாரசீகம், சபாவிட் வம்சம்
- ஹூமாயூன் எப்போது இறந்தார்? 1556
- அக்பர் அரசராக முடி சூட்ட பெற்ற பொழுது அவரின் வயது என்ன? 14
- சூர் வம்சத்தைச் சேர்ந்த எந்த தளபதி 1556 டெல்லியையும் கைப்பற்றிக் கொண்டார்? ஹெமு
- பைராம் கான் எங்கு கொல்லப்பட்டார்? குஜராத்
- மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த எந்த ராணியை பாபர் தோற்கடித்தார்? ராணி துர்காவதி
- அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சாந்த் பீபியின் மீது படையெடுத்தவர் யார்? அக்பர்
- 1568ல்சித்தூரையும் 1569 ராந்தம்பூரையும் அக்பர் யாரை தோற்கடித்து கைப்பற்றினார்? மேவார் அரசன் ராணா உதயசிங்
- 1576 உதய சிங்கின் மகனான யாரை ஹால்டிகாட் போரில் அக்பர் வெற்றி கொண்டார்? ராணா பிரதாப்சிங்
- ராணா பிரதாப் சிங்கின் குதிரை பெயர் என்ன? சேத்தக்
- அக்பர் எப்போது இயற்கை எய்தினார்? 1605
- அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது? ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தரா
- அக்பர் நீக்கிய இரண்டு வரிகள் என்ன? முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரி மற்றும் இந்து பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி
- சுஃபி துறவியான சலீம் சிஷ்டியும் சீக்கிய குருவான ராம்தாசும் எந்த முகலாய அரசரிடம் அளவில்லா மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர்? அக்பர்
- அமிர்தசரஸில் உள்ள ஹர்மிந்தேர் சாகிப் கருவறை அக்பரால் யாருக்கு வழங்கப்பட்டது? ராம்தாஸ்
- அக்பரின் புதிய தலைநகரம் எது? பதேபூர் சிக்ரி
- அனைத்து மத அறிஞர்களும் விவாதிக்கும் இடமான இபாதத் கானா எங்கு கட்டப்பட்டது? பதேபூர் சிக்ரி
- அக்பரின் சொந்த நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன? 4000 மேற்பட்ட
- அக்பர் ஆதரித்த அறிஞர்கள் யார்? அபுல் பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரஹீம் கான் இ கான்
- அக்பர் ஆதரித்த இசை மேதை யார்? குவாலியர் சேர்ந்த தான்சென்
- அக்பர் ஆதரித்த ஓவியர் யார்? தஷ்வந்த்
- ஜஹாங்கிரின் இயற்பெயர் என்ன? சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்
- ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன? உலகத்தை கைப்பற்றியவர்
- இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியாக யார் ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை தந்தார்? தாமஸ் ரோ
- ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர்? சூரத்
- ஷாஜகான் என்பதன் பொருள் என்ன? உலகத்தின் அரசர்
- ஷாஜி பான்ஸ்லே யாரிடம் தளபதியாகப் பணியாற்றினார்? சாஜஹான்
- அவுரங்கசீப்பின் சகோதரர்கள் யார்? தாரா, சுஜா ,முராத்
- ஷாஜஹான் தனது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கைதியாக கழித்தார்? ஆக்ரா கோட்டையில் உள்ள ஷாபர்ஜ் அரண்மனை
- ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன? உலகை கைப்பற்றியவர்
- இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸியா வரியை விதித்த முகலாய அரசர் யார்? ஒளரங்கசீப்
- ஒளரங்கசீப்பின் எந்த மகன் ஒளரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்ததோடு ராஜபுத்திரர்கள் உடன் சேர்ந்து கொண்டு அவருக்கு இடையூறு விளைவித்தார்? இளவரசர் அக்பர்
- இளவரசர் அக்பர் சிவாஜியின் எந்த மகனுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்? சாம்பாஜி
- சிவாஜி தன்னை மராத்திய நாட்டின் பேரரசராக எப்போது அறிவித்தார்? 1674
- சாம்பாஜியை கைது செய்து சித்திரவதை செய்து கொன்றவர் யார்? ஒளரங்கசீப்
- ஒளரங்கசீப் தன்னுடைய எத்தனையாவது வயதில் இறந்தார்? 90ஆவது
- அவுரங்கசீப் எப்போது இறந்தார்? 1707
- முகலாயப் படைகளின் தலைமை தளபதி மற்றும் நீதி வழங்குபவர் யார்? அரசர்
- முகலாயப் படைகளின் தலைமை அரசர் யார்? வக்கீல்
- முகலாய அரசின் வருவாய்த்துறை மற்றும் செலவுகள் ஆகியவற்றை கவனித்த அதிகாரியின் பெயர் என்ன? வஜீர அல்லது திவான்
- முகலாய அரசின் ராணுவ துறை அமைச்சர் யார்? மீர்பாக்ஷி
- முகலாய அரசின் மீர்சமான் என்ற அதிகாரியின் பணி என்ன? அரண்மனை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுதல்
- முகலாய அரசின் தலைமை நீதிபதி அதிகாரியின் பெயர் என்ன? குவாஜி
- இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் பெயர் என்ன? சதா-உஸ்-சுதூர்
- பேரரசுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன? சுபா-சர்க்கார் பர்கானா
- நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றை நிர்வாகித்த அதிகாரியின் பெயர் என்ன? கொத்தவால்
- சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிகாரியின் பெயர் என்ன? கொத்தவால்
- மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்த முகலாய அரசர் யார்? அக்பர்
- ஒரு மன்சப்தாரி பராமரிக்க வேண்டிய குதிரைகள் குதிரை வீரர்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்? சவார்
- யாருடைய ஆட்சிக் காலத்திற்கு பின் மன்சப்தாரி பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக மாறியது? அக்பர்
- அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்? ராஜா தோடர்மால்
- ஜப்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது? தோடர்மால்.
- ஜப்தி முறைப்படி பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் எத்தனை பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது? மூன்றில் ஒரு பங்கு
- யாருடைய காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பட்டது? ஷாஜகான்
- முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை என்ன பெயரிட்டு செயல்படுத்தினார்? ஜாகீர்
- மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரியின் பெயர் என்ன? அமில் குஜார்
- மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரிக்கு உதவிய துணைறிலை அதிகாரிகள் யார்? பொட்டாதார்,கணுங்கோ,பட்வாரி, முக்காதம்
- இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார் அவர்களுக்கு தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது? பதினாறாம் நூற்றாண்டு
- வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சுயயூர்கள்
- அக்பர் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து எந்த மதத்தை உருவாக்கினார்? தீன் இலாகி
- பாரசீகக் கட்டிடக் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்? பாபர்
- திவான்-இ-காஸ்,திவான்-இ-ஆம்,பஞ்ச் மகால்,ரங் மகால்,சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை யாரால் கட்டப்பட்டது? அக்பர்
- சிக்கந்தாராவில் உள்ள அக்பரின் கல்லறை கட்டட பணிகளை நிறைவு செய்தவர் யார்? ஜஹாங்கீர்
- நூர்ஜஹானின் தந்தையான இம்மத்-உத்-தெளலாவின் கல்லறையை கட்டியவர் யார்? ஜகாங்கீர்
- யாருடைய காலத்தில் மயிலாசனம் தயாரிக்கப்பட்டது? சாஜஹான்
- டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது? ஷாஜஹான்
- தன் தாயின் அன்பை போற்றும் வகையில் ஒளரங்காபாத்தில் கட்டப்பட்ட பீபிகா மக்பாரா என்னும் கல்லறையை கட்டியவர் யார்? ஒளரங்கசீப் பின் மகன் ஆஜம் ஷா
- செங்கோட்டை எவ்வாறு அழைக்கப்படும்? லால் குய்லா
- செங்கோட்டை எந்த அரசரால் எப்போது கட்டப்பட்டது? ஷாஜஹான் 1639
- முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? பாபர்
- எந்த ஆண்டு முகலாய பேரரசு நிறுவப்பட்டது? 1526
- முகலாயப் பேரரசு நிறுவப்பட காரணமாக இருந்தபோர் எது? பானிபட் போர்
- முகலாயப் பேரரசின் காலகட்டம் என்ன? 1526 முதல் 1857 வரை
- முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த பொழுது எங்கு வரை பரவியிருந்தது? ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரை காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரை
- பாபரின் இயற்பெயர் என்ன? ஜாகிருதீன் முகமது பாபர்
- மத்திய ஆசியாவில் இருந்த துருக்கிய இனக்குழுவின் பெயர் என்ன? உஸ்பெக்குகள்
- ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார்? சபாவி
- பாபர் எத்தனை வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்ட்டை
- பெற்றார்? பதினோரு வயது
- பாபர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்? தைமூர்
- பாபர் எந்த காலகட்டத்தில் பேரா மற்றும் சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்தார்? 1519 க்கும் 1524க்கும் இடையே
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வர வேண்டும் என்ற வேண்டுதலோடு பாபருக்கு தூதுக் குழுக்களை அனுப்பியவர் யார்? தெளலத் கான் லோடி மற்றும் ராணா சங்கா
- பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் யாருடன் போர் புரிந்தார்? தெளலத்கான் லோடி
- பாபர் தெளலத்கான் லோடியை எந்த இடத்தில் வென்றார்? லாகூர்
- முதலாம் பானிபட் போர் நடைபெற்ற நாள் எது? ஏப்ரல் 21, 1526
- வெடிமருந்து முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனர்களால்
- வெடிமருந்து எப்போது ஐரோப்பாவை அடைந்தது? கிபி 13ம் நூற்றாண்டு
- கான்வா போர் நடைபெற்றது எப்போது? 1527
- கான்வா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? சித்தூரின் ராணா சங்கா மற்றும் பாபர்
- ராணா சங்கா எந்த இடத்தினுடைய அரசன்? மேவார்
- ராணுவ சங்காவின் படைகள் பாபரை எதிர்த்து யாருடன் கூட்டணி அமைத்தன? ஆப்கான் முஸ்லிம்கள், இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி
- சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு? 1528
- சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? மேதினி ராய் மற்றும் பாபர்
- ஆப்கானியர் களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது? காக்ராப் போர்
- காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு? 1529
- காக்ரா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர் மற்றும் இப்ராஹிம் லோடியின் சகோதரனான முகமது மோடி மற்றும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத் ஷா
- காக்ரா ஆறு எந்த நதியின் துணை நதி? கங்கை
- பாபர் எப்போது காலமானார்? 1530
- பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றிருந்தார்? பாரசீகம் மற்றும் அரேபிய மொழிகள்
- பாபரின் நினைவு குறிப்புகள் பற்றிய நூலின் பெயர் என்ன? துசுக்-இ- பாபுரி பாபர் நாமா)
- எப்போது சுனார் கோட்டையை ஹுமாயுன் முற்றுகையிட்டார்? 1532
- சுனார் கோட்டை எந்த இடத்தில் அமைந்திருந்தது? தெளரா
- ஹுமாயூன் டெல்லியில் எந்த புதிய நகரை உருவாக்கினார்? தீன்பனா
- ஹுமாயுன் குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரரான யாரிடம் பொறுப்பில் விட்டார்? அஸ்காரி
- செளசா போர் நடைபெற்ற ஆண்டு எது? 1539
- செளசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன்
- கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு? 1540
- கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ஷேர்ஷா மற்றும் ஹுமாயூன்
- ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன? ஃபரீத்
- எந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஷெர்ஷா இறந்தார்? கலிஞ்சார் கோட்டை
- ஷெர்ஷா எந்த ஆண்டு இறந்தார்? 1545 வெடிகுண்டு விபத்தின் காரணமாக
- ஷேர்சாவிற்கு பின் பதவி ஏற்றவர் யார்? ஷெர்ஷாவின் இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா
- தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் களவுபோகும் பொருட்களுக்கு கிராம தலைவரே பொறுப்பு என சட்டம் கொண்டு வந்தவர் யார்? ஷெர்ஷா
- “விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்” என நம்பியவர் யார்? ஷேர்சா
- யாருடைய காலத்தில் தங்க வெள்ளி செப்புக்காசுகளில் இடம்பெறும் உலோகங்களின் தரஅளவு வரையறை செய்யப்பட்டது? ஷெர்ஷா
- ஜாகிர்தாரி முறை எந்த வம்ச காலத்தில் வளர்ச்சி பெற்றது? தில்லி சுல்தானியர் காலம்
- குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கும் அதிகாரமும் அரசாங்கத்தை சார்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் இந்த முறைக்கு பெயர் என்ன? ஜாகிர்தாரி முறை
- பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற வார்த்தையின் பொருள் என்ன? நிலத்தின் உரிமையாளர்
- சிந்து பகுதியில் இருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கிய பெருவெழியை செப்பனிட்டவர் யார்? ஷேர்ஷா சூரி
- ஷெர்ஷா குஜராத் கடற்கரை துறைமுகங்களை எந்த நகரோடு இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தார்? ஆக்ரா மற்றும் ஜோத்பூர்
- அனைத்து சாலைகளிலும் அமைக்கப்பட்ட சத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சராய்
- ஷெர்ஷா எந்த முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்? வைதீக சன்னி முஸ்லிம்
- ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டவர்கள் யார்? அக்பர் மற்றும் தோடர்மால்
- ஷெர்ஷா எங்கு புதிய நகரத்தை நிர்மாணிக்க தொடங்கினார்? தில்லி
- ஷெர்ஷா நிர்மாணிக்க தொடங்கிய புதிய நகரம் எவ்வாறு அழைக்கப்பட்டது? புராணகிலா
- ஷெர்ஷாவின் கல்லறை மாடத்தை எங்கு கட்டினார்? சசாரம்
- ஹூமாயூன் எந்தப் படை உதவியுடன் மீண்டும் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார்? பாரசீகப் படைகள்
- “வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்” என கூறியவர் யார்? லேன்பூல்
- அக்பர் எப்போது பிறந்தார்? நவம்பர் 23, 1542
- அக்பரின் எத்தனையாவது வயதில் அவருக்கு முடிசூட்டப்பட்டது? 14
- அக்பர் யாருடைய பாதுகாப்பில் ஆட்சி செய்தார்? பைரம்கான்
- இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? 1556
- இரண்டாம் பானிபட் போர் அக்பர் மற்றும் யாருடன் நடைபெற்றது? அடில்ஷாவின் இந்து படைத்தளபதியான ஹெமு
- அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநராக இருந்தவர் யார்? பைரம்கான்
- பைராம் கானின் மகன் அப்துர் ரஹீம் என்ன பட்டத்துடன் அக்பரின் அவையில் இருந்தார்? கான் இ கானான்.
- எப்போது மாளவம் பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அவர் அக்பரின் அரசவையில் ஒரு மான்சப்தாராக ஆக்கப்பட்டார்? 1562
- அக்பர் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் யாருடைய சிலைகளை நிறுவினார்? ஜெய்மால் மற்றும் பட்டா
- அக்பர் முசாபர்ஷாவிடமிருந்து எப்போது குஜராத்தை கைப்பற்றினார்? 1573
- பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத் கான் அக்பரால் எப்போது தோற்கடிக்கப்பட்டார்? 1576
- காஷ்மீர் மற்றும் சிந்து அக்பரால் எப்போது கைப்பற்றப்பட்டது? 1586, 1591
- எப்போது அக்பரால் சாந்த்பீபியிடமிருந்து பெரார் கைப்பற்றப்பட்டது? 1596
- எப்போது அக்பர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்? அக்டோபர் 27, 1605
- இந்து புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த எந்த வரியை அக்பர் நீக்கினார்? ஜிசியா வரி
- ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மால் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பீகாரிமால்
- ஹர்க்காபாய் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டார்? ஜோதா அக்பர்
- ஹால்டிக்காட் போர் எப்போது நடைபெற்றது? 1576
- ஹால்டிக்காட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? ராணா பிரதாப் சிங் மற்றும் முகலாயர்கள்
- தொடக்கத்தில் அக்பரின் தலைநகரமாக இருந்த நகரம் எது? ஆக்ரா
- அக்பர் உருவாக்கிய புதிய தலை நகரம் எது? பதேபூர் சிக்ரி
- அக்பர் அறிமுகம் செய்த நிர்வாக முறையின் பெயர் என்ன? மன்சப்தாரி முறை
- மன்சப்தாரி இரு வகைப்பட்ட தகுதிகள் என்னென்ன? ஜாட் மற்றும் சவார்
- ஒவ்வொரு மன்சப்தாரி பெரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறிக்கும் சொல்? ஜாட்
- ஒவ்வொரு மன்சப்தாரின் கீழ் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்? சவார்
- அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் என குற்றம் சாட்டிய வரலாற்று அறிஞர் யார்? பதானி
- இபாதத் கானா விவாதங்களை அக்பர் எப்போது நிறுத்தினார்? 1582
- கீழ்க்கண்ட ஞானிகளின் மதங்களை குறிப்பிடுக: 1.தேவி ,புருஷோத்தம் 2.மெகர்ஜிராண, 3.அக்வாவிவா,மான்சரட் எனும் போர்த்துகீசியர் 4.ஹிர விஜய சூரி? 1. தேவி ,புருஷோத்தம் -இந்துமதம், 2.மெகர்ஜிராண -ஜொராஸ்திரிய மதம், 3.,அக்வாவிவா,மான்சரட் எனும் போர்த்துகீசியர் – கிறிஸ்துவ மதம், 4.ஹிர விஜய சூரி- சமண மதம்
- அக்பருடைய ஒரே ஒரு கடவுள் கொள்கை மதத்தின் பெயர் என்ன? தெளகித்-இ-இலாகி தீன் இலாகி
- தெளகித்-இ-இலாகிஎன்ற சொல்லின் நேரடிப் பொருள் என்ன? தெய்வீக ஒளி கடவுள் கோட்பாடு
- எந்த அரசருடைய காலத்தில் இந்திய மொழி நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறையை உருவாக்கியவர் யார்? அக்பர்
- ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன? சலீம்
- ஜஹாங்கீர் என்ன பட்டப் பெயருடன் அரியனை ஏறினார்? நூருதீன் ஜஹாங்கீர்
- ஜஹாங்கீரின் மூத்தமகன் குஸ்ரு எந்த சீக்கிய குருவின் ஆதரவோடு கலகத்தில் இறங்கினார்? குரு அர்ஜுன் தேவ்
- ஜஹாங்கீர், ராணா அமர் சிங்கிற்கு எதிராக யார் தலைமையில் படையெடுப்பு நடத்தி அவரை வென்றார்? இளவரசர் குர்ரம்
- ஜஹாங்கீரின் காலத்தில், எப்போது யாருடைய தலைமையின் கீழ் அகமதுநகர் தன்னை சுதந்திர அரசாக அறிவித்து? 1608 மாலிக் ஆம்பரின் தலைமையில்
- அகமது நகரின் காங்கிரா கோட்டையை கைப்பற்றி அவர் யார்? இளவரசர் குர்ரம்
- ஜஹாங்கீரின் ஆட்சியின்போது வருகைதந்த ஆங்கிலேயர்கள் யார்? வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ
- மாலிக் ஆம்பர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஒரு அடிமையாக கொண்டுவரப்பட்டார்?’ எத்தியோப்பியா
- மாலிக் ஆம்பர் அரசியல் விவேகம் ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டார்? செங்கிஸ்கான்
- மாலிக் ஆம்பர் எப்போது இறந்தார்? மே 14 1626
- எந்த ஆங்கிலேயர் ஜஹாங்கீர் இடமிருந்து சூரத் நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை அமைத்துக் கொள்வதற்கான அனுமதி பெற்றார்? தாமஸ் ரோ
- தாமஸ் ரோ எந்த இங்கிலாந்து அரசர் அனுப்பிய தூதுவராக ஜஹாங்கீரை சந்தித்தார்? முதலாம் ஜேம்ஸ்
- நூர்ஜஹானின் இயற்பெயர் என்ன? மெகருன்னிசா
- இளவரசர் குர்ரம் தனது தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தபோது அதனை அடக்கியவர் யார்? தளபதி மகபத்கான்
- ஜஹாங்கீர் எந்த ஆண்டு இறந்தார்? 1627
- ஜஹாங்கிர் இறந்தவுடன் யாரை அரசராக்க நூர்ஜகான் முயன்றார்? மருமகன் ஷாரியர்
- நூர்ஜஹான் எப்போது இறந்தார்? 1645
- கான்ஜகான் எனும் பட்டப்பெயர் கொண்டவர் யார்? ஆப்கானிய பிர்லோடி
- அகமதுநகர் சுல்தான் இரண்டாம் மூர்தசா யாருடன் இணைந்து ஷாஜஹானுக்கு எதிராக சதிகளில் ஈடுபட்டார்? நிஜாம் ஷா
- ஆசம் கான் எனும் பட்டத்தை பெற்றவர் யார்? இராதத்கான்
- தக்காணத்தை அகமதுநகர் காண்டேக்ஷ், பெரார்,தெலுங்கானா என நான்கு மாறிலங்களாகப் பிரித்த அரசர் யார்? ஷாஜகான்
- ஷாஜகான் தக்காணத்தை பிரித்த பிறகு அந்த நான்கு மாநிலங்களுக்கும் ஆளுநராக யாரை நியமித்தார்? அவுரங்கசீப்
- எந்த ஆண்டு அக்பரால் கைப்பற்றப்பட்டு ஜஹாங்கீரால் இழக்கப்பட்ட காந்தகாரை மீண்டும் ஷாஜகான் கைப்பற்றினார்? 1638
- போர்த்துகீசியர் எந்த ஆண்டு பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து கோவாவை கைப்பற்றினார்? 1510
- டேனியர் முதன் முதலில் எங்கு எப்போது குடியிருப்புகளை ஏற்படுத்தினர்? தரங்கம்பாடி 1620
- எந்த ஆண்டு ஷாஜகானின் அமைச்சருமான மாமனாருமான ஆசஃப்கான் மரணமடைந்தார்? 1641
- ஷாஜகானின் ஆட்சியின்போது அவரது சமகாலத்து அரசராக இருந்த பிரான்ஸ் நாட்டின் அரசர் யார்? பதினான்காம் லூயி
- தாஜ்மஹாலின் தலைமை கட்டடக்கலை நிபுணர் ஆக இருந்தவர் யார்? உஸ்தத் அகமத் லஹாவ்ரி
- தாஜ்மஹாலின் நான்கு கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? மினார்
- எந்த ஆண்டு தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின? 1632
- தத்துவஞான இளவரசர் என அறியப்படுபவர் யார்? தாராஷுகோ
- சமஸ்கிருத மொழியில் இருந்த உபறிடதங்களை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்? தாராஷுகோ
- ஷாஜகான் எப்போது மரணம் அடைந்தார்? ஜனவரி 1666
- ஒளரங்கசீப் என்ன பட்டத்துடன் அரியணை ஏறினார்? ஆலம்கீர்
- ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன? உலகை வெல்பவர்
- ஒளரங்கசீப் எப்போது எங்கு மரணம் அடைந்தார்? அகமதுநகர் 1707
- ஒளரங்கசீப்பின் தலைநகரமாக இருந்த நகரம் எது? ஷாஜஹானாபாத்
- ஒளரங்கசீப் காலத்தில் நிலவரி ஆனது விளைச்சலில் எவ்வளவு வரியாக வசூலிக்கப்பட்டது?’ சரிபாதி
- வட இந்தியாவில் ஒளரங்கசீப்பின் எதிராக மூன்று மிக முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது அவை என்னென்ன? ஜாட், சத்னாமியர் & சீக்கியர் கலகம்
- சிக்கிய கலகம் யாருடைய சூழ்ச்சியின் காரணமாக வெடித்தது? ராம்ராய்
- தேஜ்பகதூர் சீக்கியரின் எத்தனாவது குரு? ஒன்பதாவது குரு
- கோல்கும்பாஸ் கட்டிடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது? அடில்ஷாகி மன்னர் காலம்
- உலகின் மிகப்பெரிய குவிமாடம் கட்டடம் எது? புனித பீட்டர் தேவாலயம் ரோம்
- உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் கட்டடம் எது? கோல்கும்பாஸ்
- கோல்கும்பாஸின் சராசரி உயரம் என்ன? 135 அடி
- ஒளரங்கசீப் எந்த ஆண்டு தற்காலத்திற்கு வருகை தந்தார்? 1682
- சிவாஜி தனது எத்தனையாவது வயதில் காலமானார்? 53
- எந்த ஆண்டு சாம்பாஜி கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்? 1689
- ஜிஸ்யா வரியை மீண்டும் விதித்தவர் யார்? ஒளரங்கசீப்
- ஒளரங்கசீப்பால் ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்திய வரியின் பெயர் என்ன ? அப்வாப்
- முகலாயர் காலத்தில் கிராம தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? முக்காடம்
- முகலாயர் காலத்தில் கிராம தலைவர்கள் கிராம நிர்வாக உறுப்பான எந்த அமைப்பினை உருவாக்கினார்? பஞ்ச்
- எனப்பட்ட மானியத்தை முகலாய பேரரசிடமிருந்தும், உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்து பெற்றனர்? மதாத்-இ-மாஷ்
- ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதிகள் உடைய சாதிகளை பட்டியலிடும் நூலின் பெயர் என்ன? அயினி அக்பரி
- அயினி அக்பரி நூலை எழுதியவர் யார்? அபுல் பாசல்
- சிவாஜியின் தந்தை ஷாஜி எந்த முகலாய அரசரிடம் சிலகாலம் பணியாற்றினார்? ஷாஜகான்
- முஸ்லிம் மணப்பெண்கள் திருமணத்தின் போது மணமகனிடம் இருந்து பெற வேண்டிய கட்டாய பணத்தின் பெயர் என்ன? மகர்
- ராபி காரிப் ஆகிய இரு பருவங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர் வகைகளை பற்றி பட்டியலிடும் நூல் எது? அயனி அக்பரி
- புகையிலையும் மக்காசோளம் எந்த நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன? பதினேழாம் நூற்றாண்டு
- ஜப்தி முறை யாரால் அறிமுகம் செய்யப்பட்டது? தோடர்மால்
- ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் எவ்வாறு அழைக்கப்பட்டது? தஸ்தர்
- விலையுயர்ந்த கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட தொழிற்கூடங்களின் பெயர் என்ன? கர்கானா
- பெருமளவிலான பொருட்களை தொலைதூர பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்த நாடோடி வணிக இனக்குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? பஞ்சாரா
- முகலாயர் காலத்தில் அரிசி சர்க்கரை மஸ்லின் பட்டு உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் எந்த நகரம் மிக முக்கிய மைமமாக இருந்தது? வங்காளம்
- தனது பருத்தித் துணி உற்பத்திக்காக புகழ் பெற்றிருந்த இடம்? சோழமண்டலக் கடற்கரை
- பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு உதவிய கடன் பத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? உண்டி
- எந்த நூற்றாண்டுகள் வைணவ மதத்தின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகிறது? 16, 17ஆம் நூற்றாண்டு
- ராமர் வழிபாட்டு மரபை தனது புகழ்பெற்ற பக்தி பாடல்கள் மூலம் வழிமொழிந்தார் யார்? துளசிதாசர்
- சூர்-சராவளி எனும் நூலை எழுதியவர் யார்? சூர்தாஸ்
- ஏகநாதர் துக்காராம் ஆகியோர் எந்தப் பகுதியைச் சேர்ந்த பக்தி இயக்க கவிஞர்கள் ஆவர்? மகாராஷ்டிரா
- வியாசராயரால் பிரபல படுத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கத்தின் பெயர் என்ன? தசருதா
- கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் தொழிலை குறிப்பிடுக: 1. கபீர் – 2.ரவிதாஸ் – 3.சைன் – 4. தாது? 1. கபீர் -நெசவாளர், 2.ரவிதாஸ் -தோல் பதனிடுபவர், 3.சைன் -சிகை அலங்காரம் தொழில் செய்தவர், 4.தாது “பருத்தியை சுத்தம் செய்பவர்
- குரு கிரந்த சாகிப் யாருடைய போதனைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது? ஷேக் பரீத் நாமதேவர் கபீர் ரவிதாஸ் ஷைன்
- இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் மதக் கோட்பாட்டின் பெயர் என்ன? சூபியிஸம்
- சூஃபியிசம் எங்கு உதயமானது? ஈரான்
- டேனியரின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மத பரப்பாளர்கள் எந்த ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர்? 1706
- விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்? சீகன்பால்கு
- ஐரோப்பாவிலிருந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லை என குறிப்பிடுபவர் யார்? பெர்னியர், பிரான்ஸ்
- பெய்சி யாருடைய அவைக்களப் புலவராக இருந்தார்? அக்பர்
- புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை எழுதியவர் யார்? பாஸ்கராச்சாரியார்
- புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிபெயர்த்தவர் யார்? பெய்சி
- பாரசீக சக்கரம் யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? பாபர்
- வரிசையாக விசை சக்கரங்கள் பொருத்தப்பட்ட சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் எங்கு நிறுவப்பட்டது? பதேபூர் சிக்ரி
- வெடியுப்பைப் பயன்படுத்தி நீரை குளிர்விக்கும் முறையை பரவலாக்கியப் பெருமை யாரைச் சேரும்? அக்பர்
- கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அறியப்படுபவர் யார்? அக்பர்
- சிகப்பு நிற மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட புலந்தர்வாசா யாரால் கட்டப்பட்டது? அக்பர்
- அக்பரின் கல்லறை எங்கு அமைந்துள்ளது? சிக்கந்தரா
- முகலாயர்கள் யாருக்காக முதன்முதலில் வெள்ளை நிற பளிங்கு கற்களால் முதல் கட்டிடத்தை கட்டினார்? நூர்ஜஹானின் தந்தை இதிமத் உத் தெளலா
- யாருடைய காலத்தில் முகலாய கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது? ஷாஜகான்
- யாருடைய காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது? ஒளரங்கசீப்
- பீபிமக்பாரா (பெண்ணின் கல்லறை) என்று அழைக்கப்படும் கல்லறை எங்கு உள்ளது? ஒளரங்காபாத்
- ஷாலிமார் தோட்டங்கள் யாரால் உருவாக்கப்பட்டவை? ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான்
- மத்திய ஆசியாவில் இருந்து ஹூமாயூனோடு இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்கள் யார்? அப்துல் சமத், மீர் சையத் அலி
- அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்கள் யார்? தஷ்வந்த் மற்றும் பசவன்
- எந்த அரசருடைய காலத்தில் உருவப்படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றன? ஜஹாங்கீர்
- முகலாய நுண் ஓவியங்கள் டச்சு நாட்டின் தலைசிறந்த ஓவியரான யாரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின? ரெம்பிராண்ட்
- இசைக் கலைஞரான தான்சென் யாரால் ஆதரிக்கப்பட்டார்? அக்பர்
- யாருடைய காலத்தில் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன? ஒளரங்கசீப்
- எந்தெந்த நூல்களில் இசைக் கருவிகளோடு பெண்கள் நடனம் ஆடும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன? பாபர் நாமா பாதுஷா நாமா
- முகலாயர் காலத்தில் எந்த மொழி நிர்வாக மொழியாக இருந்தது? பாரசீகம்
- எந்த நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார்? அக்பர் நாமா
- பாதுஷா நாமா யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றி கூறுகிறது? ஷாஜஹான்
- பாபி ஷாநாமா எனும் நூல் எழுதியவர்கள் யார்? அப்துல் ஹமீது லகோரி மற்றும் முகமது வரிஸ்
- ஆலம்கீர் நாமா எனும் நூல் யாரைப் பற்றியது? ஒளரங்கசீப்
- ஆலம்கீர் நாமா எனும் நூலை எழுதியவர் யார்? முகமது காசிம்
- பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தவர் யார்? ரகீம் கானி-இ-கானான்
- யாருடைய மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது? அபுல் பெய்சி
- தராஷுகோவால் உபநிடதங்கள் என்ன பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது? சர்-இ- அக்பர் (மாபெரும் இரகசியம்)
- ராஜவலிபதகா என்னும் நூலை எழுதியவர் யார்? விடை கீழே கமெண்ட் செய்யவும்
- ராஜவலிபதகா எனும் நூல் அவருடைய காலத்தில் யாரால் தொகுக்கப்பட்டது? பிரக்ஞபட்டர்
- தஜிகனிலந்தி எனும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தவர் யார்? நீலகண்டர்
- ஜெகநாத பண்டிதர் யாருடைய அவைக்களப் புலவர்? ஷாஜகான்
- ஜெகநாத பண்டிதர் இயற்றிய நூலின் பெயர் என்ன? ரசகங்காதரா
- அப்துர் ரஹீம் வாழ்க்கை குறித்த மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப்பாடல்களை எந்த மொழியில் எழுதினார்? பிரிஜி
- ஏகநாதர் துக்காராம் ராம்தாஸ் முக்தீஸ்வர் ஆகியோரின் படைப்புகள் எந்த இலக்கியம் எழுச்சி பெற்றது? மராத்திய இலக்கியம்
- மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் மராத்தி மொழியில் எழுதியவர் யார்? முக்தீஸ்வர்
- ஆமுக்த மால்யதா எனும் நூலை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
- அல்லசானி பெத்தண்ணா எழுதிய நூலின் பெயர் என்ன? மனுசரித்ரா
- அசாமிய மொழியில் பக்தி பாடலை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை உருவாக்கியவர் யார்? சங்கரதேவர்
- சீக்கியரின் புனித நூலான குரு கிரந்தத்தை தொகுத்தவர் யார்? குரு அர்ஜுன் சிங்
- மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ் நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்? குமரகுருபரர்
- சமரச சன்மார்க்கம் எனும் அறத்தை உள்ளடக்கிய பக்தி பாடல்களை இயற்றியவர் யார்? தாயுமானவர்
இந்த 300 முகலாயர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள பயிற்சியாக இருக்கும். இந்த வினா விடைகள் மூலம் நீங்கள் முகலாயர்கள் ஆட்சியின் வரலாற்று சிறப்புகளை மற்றும் அதன் அரசியல், சமூக மற்றும் பொருளாதாரம் பற்றிய உங்கள் அறிவை மேம்படுத்த முடியும்.
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 300 முகலாயர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

