
ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் எழுத விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஹேமலதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் வரும் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சிபெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தோ்வா் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் காமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, பின்னா் தோ்வுக் கட்டணம் செலுத்த நேரில் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50 கட்டணமும், மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 15, இணையதள (ஆன்லைன்) பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும். மாா்ச் 18 முதல் 24 வரை தோ்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தோ்வா்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (TATKAL) மாா்ச் 25, 26-இல் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தகுதியற்ற தோ்வா்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

