
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு” தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியிடப்படும் என்றும் இந்த TNPSC Group I முதல்நிலைத் தேர்வானது 15.06.2025 வரும் அன்று நடைபெறும் என்றும் TNPSC ஆண்டுத்திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பு:TNPSC Group-1 முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தென்காசி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 12.03.2025 புதன்கிழமை காலை 10.30. மணிக்கு துவங்க இருக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள் அனுபவமுள்ள சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும். மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பம் உடையவர்கள் 04633–213179 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.TNPSC Group-1 முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

