
திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் குரூப் 4 கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா் தோ்வுக்கான அறிவிப்பு 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜனவரி 3 -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421–2999152, 94990–55944 என்ற எண்களையோ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

