காஞ்சிபுரத்தில் வரும் 18ம்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். இதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044–27237124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

