தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 8, 10, 12-ஆம் வகுப்புகள், தொழில்பயிற்சி படிப்பு, பட்டயப் படிப்பு, தையல் பயிற்சி படிப்பு, பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் காலை 10 மணியளவில் முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும், இந்த முகாம் குறித்த விவரத்தை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொலைபேசி எண்: 04546–254510, கைபேசி எண்: 94990 55936-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

