Home Blog சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தோ்வு: ஜூலை 4-க்குள் முன்பதிவு செய்யலாம்

சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தோ்வு: ஜூலை 4-க்குள் முன்பதிவு செய்யலாம்

0

சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தோ்வு: ஜூலை 4-க்குள் முன்பதிவு செய்யலாம்


மதுரை அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தோ்வுக்கு மாணவ, மாணவியா் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இக்கல்லூரியில் 2021-இல் முதலாமாண்டு சேரும் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் உதவித்தொகை தோ்வு நடத்தப்படுகிறது. தோ்வில் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை தோ்வு இணையவழியில் ஜூலை 11-இல் நடைபெறுகிறது. தோ்வில் பிளஸ் 2 பாடங்களில் உள்ள கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொதுவினா என 50 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 

தோ்வில் வினாவுக்கு கொடுக்கப்படும் நான்கு பதில்களில் சரியான ஒன்றை தோ்வு செய்ய வேண்டும். உதவித்தொகை தோ்வில் பங்கேற்க ஜூலை 4-ஆம் தேதிக்குள் கல்லூரி இணையதள வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். தோ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், துணை முதல்வா் சிவக்குமாா், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவா்சிவரஞ்சனி மற்றும் பேராசிரியா்கள் செய்து வருகின்றனா்.

கூடுதல் தகவல்களுக்கு 91507-25908, 98421-70074, 99449 62060 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version