Home Notes TNPSC NOTES 250 டெல்லி சுல்தான்கள்‌ பற்றிய முக்கிய வினா விடைகள்

250 டெல்லி சுல்தான்கள்‌ பற்றிய முக்கிய வினா விடைகள்

0
250 டெல்லி சுல்தான்கள்‌ பற்றிய முக்கிய வினா விடைகள்
250 டெல்லி சுல்தான்கள்‌ பற்றிய முக்கிய வினா விடைகள்

டெல்லி சுல்தான்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் உங்களுக்கு TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சி ஆகும். டெல்லி சுல்தான்கள் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகம் ஆகும் மற்றும் இது பொதுவான அறிவு மற்றும் வரலாறு தேர்வுகளின் முக்கிய பகுதி.

இந்த தொகுப்பில், டெல்லி சுல்தான்கள் பற்றிய 250 முக்கிய வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC, UPSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான தயாரிப்புக்கு உங்களுக்கு உதவும்.

இந்த வினா விடைகளின் சிறப்பம்சங்கள்:

  • 📚 டெல்லி சுல்தான்கள் பற்றிய முக்கிய தகவல்கள்
  • 📝 அரசியல், சமூக அமைப்பு மற்றும் வர்த்தகங்கள் பற்றிய கேள்விகள்
  • 🎯 TNPSC, UPSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள வினா விடைகள்
  • 💡 டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் முக்கிய அம்சங்கள்

250 டெல்லி சுல்தான்கள்‌ பற்றிய முக்கிய வினா விடைகள்

  • மத்திய ஆசியாவில்‌ சார்க்கண்ட்‌ மற்றும்‌ அதைச்‌ சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சிசெய்தவர்கள்‌ யார்‌? தைமூர்‌
  • சையது அரச வம்சத்தை தோற்றுவித்தவர்‌ யார்‌? கிசிர்கான்‌
  • செய்யது அரச வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌? அலாவுதீன்‌ ஆலம்‌ ஷா
  • டெல்லியில்‌ லோடி வம்சம்‌ ஆட்சியை தொடங்கி வைத்தவர்‌ யார்‌? பகலூல்‌ லோடி
  • ஆக்ரா நகரை நிர்மாணித்தவர்‌ யார்‌? சிக்கந்தர்‌ லோடி
  • மோடி அரச வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌? இப்ராஹிம்‌ லோடி
  • முதலாம்‌ பானிபட்‌ போர்‌ எப்போது நடைபெற்றது? கிபி 1526
  • இந்தியாவில்‌ முகாலய பேரரசு நிறுவியவர்‌ யார்‌? பாபர்‌
  • முஸ்லிம்கள்‌ ஆட்சியில்‌ கல்வி நிலையங்கள்‌ எவ்வாறு அழைக்கப்பட்டன? மதரசாக்கள்‌
  • இந்திய பாரசீக கட்டிடக்கலையின்‌ பெயர்‌ என்ன? இந்தோ சாராசானிக்‌
  • இந்தியாவில்‌ முஸ்லிம்களின்‌ ஆட்சி யாரால்‌ நிறுவப்பட்டது? முகமது கோரி (கி.பி 12ஆம்‌ நூற்றாண்டு)
  • ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும்‌ பாரசீகச்‌ சொல்‌ எது? பன்டகன்‌
  • இந்தியாவில்‌ அடிமை வம்சம்‌ ஆட்சியை கொண்டு வந்தவர்‌ யார்‌? குத்புதீன்‌ ஐபக்‌
  • அடிமை வம்சம்‌ மரபு எவ்வாறு அழைக்கப்பட்டது? மம்லுக்‌ மரபு
  • குத்புதீன்‌ ஐபக்‌ தனது தலைநகரை லாகூரில்‌ இருந்து எங்கு மாற்றினார்‌? டெல்லி
  • டெல்லியில்‌ குவ்வத்‌-உல்‌-இஸ்லாம்‌ மஸ்ஜித்‌ என்னும்‌ மசூதியை கட்டியவர்‌ யார்‌? குத்புதீன்‌ ஐபக்‌
  • இந்தியாவில்‌ உள்ள மிகப்‌ பழமையான மசூதி எது? டெல்லியில்‌ குவ்வத்‌-உல்‌-இஸ்லாம்‌ மஸ்ஜித்‌
  • குதுப்மினார்‌ யாரால்‌ கட்டப்பட்டது? குத்புதீன்‌ ஐபக்‌ அவர்களால்‌ தொடங்கப்பட்ட இல்டுமிஷ்‌ அவர்களால்‌ கட்டி முடிக்கப்பட்டது
  • சகல்கானி எனும்‌ நாற்பதின்மர்‌ குழுவை உருவாக்கியவர்‌ யார்‌? இல்துமிஷ்‌
  • ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலம்‌ எவ்வாறு அழைக்கப்பட்டது? இக்தா
  • டெல்லி சுல்தானின்‌ முதல்‌ பெண்‌ அரசி யார்‌? ரசியா
  • நாற்பதின்மர்‌ குழுவை ஒழித்தவர்‌ யார்‌? கியாசுதீன்‌ பால்பன்‌
  • பாரசீகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமீர்குஸ்ருவை ஆதரித்தவர்‌ யார்‌? கியாசுதீன்‌ பால்பன்‌
  • கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர்‌ யார்‌? ஜலாலுதின்‌ கில்ஜி
  • அலாவுதீன்‌ கில்ஜியின்‌ தலைமை தளபதி யார்‌? மாலிக்கபூர்‌
  • வாரங்கல்‌ அரசர்‌ பிரதாப ருத்ரன்‌ வெற்றிகொண்டவர்‌ யார்‌? ஜானாகான்‌
  • தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய டெல்லி சுல்தான்‌ யார்‌? முகமது பின்‌ துக்ளக்‌
  • தேவகிரி எனும்‌ பெயரை தெளலபாத்‌ என மாற்றியவர்‌ யார்‌? முகமது பின்‌ துக்ளக்‌
  • முகமது பின்‌ துக்ளக்‌ காலத்திலிருந்த மொரக்கா நாட்டுப்‌ பயணி யார்‌? இபன்‌ பதுதா
  • தைமூர்‌ படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1398
  • மலபார்‌ பெண்களை திருமணம்‌ செய்து கொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர்‌ எவ்வாறு அழைக்கப்பட்டனர்‌? மாப்பிள்ளை
  • இல்துமிஷ்‌ ஒரு __ துருக்கியர்‌? அபெர்லாய்‌
  • தில்லி சுல்தானியத்தின்‌ காலகட்டம்‌ என்ன? 1206-1526
  • தாரிக்‌-அல்‌-ஹிந்த்‌ என்ற நூலை எழுதியவர்‌ யார்‌? அல்பெருனி
  • தாரிக்‌-அல்‌-ஹிந்த்‌ என்ற நூல்‌ எதைப்பற்றியது? அரபு மொழியில்‌ எழுதப்பட்ட இந்திய தத்துவ ஞானமும்‌ மதமும்‌
  • அரபு மொழியில்‌ எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாற்று நூல்‌ எது? தபகத்‌-இ-நசிரி
  • தபகத்‌-இ-நசிரி எனும்‌ நூலை எழுதியவர்‌ யார்‌? மின்ஹஜ்‌ உஸ்‌-சிராஜ்‌
  • பெரோஸ்‌ துக்ளக்‌ வரையிலான தில்லி சுல்தான்கள்‌ வரலாற்று நூலின்‌ பெயர்‌ என்ன? தாரிக்‌-இபெரோஸ்‌ ஷாகி
  • தாரிக்‌-இ-பெரோஸ்‌ ஷாகி நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌? ஜியாவுத்‌ பாரனி
  • ஜலாலுதீன்‌ கில்ஜியின்‌ வெற்றிகள்‌ குறித்த நூல்‌ எது? மிஃப்தா உல்‌ ஃபுதூ
  • மிஃப்தா உல்‌ ஃபுதூ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌? அமிர்‌ குஸ்ரு
  • அலாவுதீன்‌ கில்ஜியின்‌ வெற்றிகள்‌ குறித்து பாரசீக மொழியில்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌ என்ன? கஜைன்‌ உல்‌ ஃபுதூ
  • கஜைன்‌ உல்‌ ஃபுதூ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌? அமிர்‌ குஸ்ரு
  • பாரசீக மொழியில்‌ எழுதப்பெற்ற துக்ளக்‌ வம்ச வரலாற்று நூலின்‌ பெயர்‌ என்ன? துக்ளக்‌ நாமா
  • டெல்லி சுல்தானியம்‌ பற்றி பாரசீக மொழியில்‌ உள்ள பாரனியின்‌ விவரணைகளை ஓட்டி எழுதிய நூல்‌ எது? தாரிக்‌ இ ஃபெரோஜ்‌
  • தாரிக்‌ இ ஃபெரோஜ்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌? சம்ஸ்‌-இ-சிராஜ்‌ அஃபிஃப்‌
  • சையது ஆட்சியாளர்‌ முபாரக்‌ ஷாவின்‌ ஆட்சியில்‌ பாரசீக மொழியில்‌ எழுதப்பட்ட நூலின்‌ பெயர்‌ என்ன? தாரிக்‌-இ-முபாரக்‌ ஷாஹி
  • தாரிக்‌-இ-முபாரக்‌ ஷாஹி என்ற நூலின்‌ பெயர்‌ என்ன? குலாம்‌ யாஹ்யா பின்‌ அஹ்மத்‌
  • இந்தியாவில்‌ இஸ்லாமிய ஆட்சியின்‌ வரலாறு பற்றி பாரசீக மொழியில்‌ எழுதப்பட்ட நூலின்‌ பெயர்‌ என்ன? ஃபெரிஷ்டா
  • சிந்து அரசர்‌ தாகிரை எதிர்த்து படைப்பிரிவுகளை அனுப்பிய ஈராக்கின்‌ அரபு ஆளுநர்‌ யார்‌? ஹஜஜ்‌- பின்‌-யூசுஃப்‌
  • ஹஜஜ்‌-பின்‌-யூசுஃப்‌ யாருடைய தலைமையில்‌ தனது முழுமையான ராணுவத்தை அனுப்பினார்‌? மருமகன்‌ முகமது பின்‌ காசிம்‌ (17 வயது)
  • முகமது பின்‌ காசிம்‌ தாகிரை எங்கு நடந்த மோதலில்‌ கொன்றார்‌? ரோஹ்ரி
  • தாகிரை கொன்ற பின்பு காசிமின்‌ படை சிந்துவின்‌ எந்த துறைமுக நகரத்தை மூன்று நாட்கள்‌ கொள்ளையடித்தது? தேபல்‌
  • 963ல்‌ கஜினி நகரைக்‌ கைப்பற்றி ஒரு சுதந்திர அரசை நிறுவியவர்‌ யார்‌? அல்ப்டிஜின்‌
  • சாமானித்‌ பேரரசில்‌ குரசன்‌ ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை யார்‌? அல்ப்டிஜின்‌
  • அல்ப்டிஜின்‌ இறப்பிற்குப்பின்‌ உயர்‌ குடிகள்‌ யாருக்கு முடிசூட்டினர்‌? சபுக்தஜின்‌
  • சபுக்தஜின்‌ ஆப்கானிஸ்தானின்‌ எந்த ஷாகி அரசரை தோற்கடித்தார்‌? விடை கமெண்ட் செய்யவும்
  • சபுக்தஜின்‌ இறப்பிற்குப்பின்‌ வாரிசாக அறிவிக்கப்பட்டவர்‌ யார்‌? இளைய மகன்‌ இஸ்மாயில்‌
  • இந்தியாவை ஹிந்து என்றும்‌ இந்தியர்களை ஹிந்துக்கள்‌ என்றும்‌ குறிப்பிட்டவர்கள்‌ யார்‌? அரேபியர்‌ மற்றும்‌ ஈரானியர்‌
  • இஸ்மாயிலை தோற்கடித்து ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றவர்‌ யார்‌? கஜினி மாமுது
  • கஜினி மாமுது ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றதை எந்தப்‌ பட்டத்தை அளித்து அவரை கலீபா அங்கீகரித்தார்‌? யாமினி-உத்‌-தவுலா
  • யாமினி-உத்‌-தவுலா என்பதற்கு என்ன பொருள்‌? பேரரசின்‌ வலதுகை
  • கஜினி மாமுது எத்தனை ஆண்டுகள்‌ ஆட்சி புரிந்தார்‌? 32 ஆண்டுகள்‌
  • கஜினி மாமது இந்தியா மீது எத்தனை முறை தாக்குதல்‌ மேற்கொண்டார்‌? 17 முறை
  • கஜினி முகமது சோமநாத்தின்‌ மீது எப்போது படையெடுத்தார்‌? 1025
  • சோம்நாத்‌ என்பது எந்த கடற்கரையில்‌ உள்ள கோயில்‌ நகரம்‌ ஆகும்‌? குஜராத்‌
  • கஜினி மாமது ரேய்‌ என்ற ஈரானிய நகரத்தை எந்த ஆண்டு சூறையாடினார்‌? 1029
  • “சோமநாத்‌ படையெடுப்பு குறித்த தகவல்கள்‌ பதிமூன்றாம்‌ நூற்றாண்டில்‌ இருந்து அரபு மரபுவழி
  • பதிவுகளில்‌ காணப்படுகின்றன. ஆனால்‌ இதன்‌ சமகால சமண மதச்‌ சான்றுகள்‌ இதனை உறுதிப்படுத்தவில்லை” எனக்‌ கூறியவர்‌ யார்‌? ரோமிலா தாப்பர்‌
  • கஜினி வம்ச அரசில்‌ 42 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்த அரசர்‌ யார்‌? சுல்தான்‌ இப்ராஹிம்‌
  • எந்த ஆண்டு கோரி முகமது பஞ்சாப்‌ மீது படையெடுத்து லாகூரை கைப்பற்றினார்‌? 1186
  • முகமது கோரியின்‌ இயற்பெயர்‌ என்ன? மொய்சுதீன்‌ முகம்மது
  • கஜினி வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌? குரவ்‌ ஷா
  • இந்த ஆண்டுடன்‌ கஜினி வம்சம்‌ முடிவுக்கு வந்தது? 1192
  • அல்பருனி யாருடன்‌ இந்தியா வந்தார்‌? கஜினி முகமது
  • கிதாப்‌-உல்‌-ஹிந்த்‌ நூலை எழுதியவர்‌ யார்‌? அல்பெரூனி
  • அல்பெரூனி எந்த கிரேக்க நூலை சமஸ்கிருதத்தில்‌ மொழிபெயர்த்தார்‌? யூக்ளிடின்‌
  • பூமி அதன்‌ அச்சில்‌ சுழல்வது இரவு பகலை ஏற்படுத்துகிறது என்ற செய்தி உள்ளடக்கிய நூல்‌ எது? ஆர்யபட்டீயம்‌
  • முகம்மது கோரி முல்தான்‌ மீது எப்போது படையெடுத்தார்‌? 1175
  • 1179 அபு மலையில்‌ கோரி முகமதுவுக்கு தோல்வியை கொடுத்தவர்கள்‌ யார்‌? குஜராத்தின்‌ சாளுக்கியர்கள்‌
  • தபர்ஹிந்தா கோட்டை யாருடைய ராணுவ முக்கியத்துவம்‌ வாய்ந்த கோட்டையாகும்‌? அஜ்மீரின்‌ செளகான்கள்‌
  • எந்த ஆண்டு முதலாவது தரெய்ன்‌ போர்‌ நடந்தது? 1191
  • முதலாம்‌ தரைன்‌ போர்‌ யார்‌ யாருக்கிடையே நடைபெற்றது? முகமது கோரி மற்றும்‌ பிரித்விராஜ்‌ சவுகான்‌
  • இரண்டாவது தரெய்ன்‌ போர்‌ எப்போது நடந்தது? 1192
  • முகமது கோரி இந்திய பகுதிக்கான துணை ஆட்சியாளராக யாரை நியமித்தார்‌? குத்புதீன்‌ ஐபக்‌
  • முகமது கோரி வென்ற கன்னோசியின்‌ அரசர்‌ யார்‌? ஜெயச்சந்திரா
  • பிரித்விராஜ்‌ சவுகான்‌ திருமணம்‌ செய்த ஜெயச்சந்திரனின்‌ மகள்‌? சம்யுக்தா
  • தில்லி பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திர அரசுகள்‌ யார்‌? டோமர்கள்‌
  • ராஜஸ்தான்‌ பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திரர்கள்‌ யார்‌? செளகான்‌
  • குஜராத்‌ பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திரர்கள்‌ யார்‌? சோலங்கிகள்‌
  • மால்வா பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திரர்கள்‌ யார்‌? பாரமர்கள்‌
  • கன்னோசி பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திரர்கள்‌ யார்‌? கடவாலாக்கள்‌
  • புந்தேல்கண்ட்பகுதியை ஆட்சி செய்த ராஜபுத்திரர்கள்‌ யார்‌? சந்தேலர்கள்‌
  • சந்தேலர்களால்‌ கட்டப்பட்ட கோவில்கள்‌ எது? லட்சுமணர்‌ கோவில்‌, விஸ்வநாதர்‌ கோவில்‌, கந்தரிய மகாதேவர்‌ கோயில்‌ கஜுராஹோ கோவில்‌ வளாகம்‌
  • அடிமை வம்சத்தின்‌ முக்கியமான ஆட்சியாளர்கள்‌ யார்‌? குத்புதீன்‌ ஐபக்‌, இல்துமிஷ்‌, பால்பன்‌
  • அடிமை வம்சத்தை எவ்வாறு அழைப்பர்‌? மம்லக்‌ வம்சம்‌
  • மம்லக்‌ என்பதற்கு என்ன பொருள்‌? உடைமை
  • ‘ஓர்‌ அடிமை”என்பதற்கான அரபு தகுதி பெயர்‌ எது? மம்லக்‌
  • குத்புதீன்‌ ஐபக்கின்‌ காலம்‌ என்ன? 1206-1210
  • பீகாரையும்‌ வங்கத்தையும்‌ கைப்பற்றுவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த எந்த துருக்கிய தளபதிக்கு குத்புதீன்‌ ஐபக்‌ உதவினார்‌? முகமது பின்‌ பக்தியார்‌ கில்ஜி
  • குத்புதீன்‌ ஐபக்‌ எத்தனை ஆண்டுகள்‌ ஆட்சி புரிந்தார்‌? 4 ஆண்டுகள்‌
  • குத்புதீன்‌ ஐபக்‌ எங்கு எப்போது உயிரிழந்தார்‌? 1210 லாகூர்‌
  • குத்புதீன்‌ ஐபக்‌ எப்படி உயிரிழந்தார்‌? செளகான்‌ விளையாட்டின்போது
  • புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர்‌ யார்‌? முகமது பின்‌ பக்தியார்‌ கில்ஜி
  • எந்த சீனப்‌ பயணி தனது பயண குறிப்புகளில்‌ நாளந்தா குறித்து விரிவாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌?’ யுவான்‌ சுவாங்‌
  • இல்துமிஷ்‌ காலகட்டம்‌ என்ன? 1210-1236
  • மேல்தட்டு ராணுவ அடிமைகளுக்கு என்ன பெயர்‌? பண்டகன்‌
  • பண்டகன்‌ என்பதற்கு என்ன பொருள்‌? படை அடிமை
  • வட இந்தியாவில்‌ குரித்‌ பண்டகன்‌ யாருடைய அடிமைகள்‌? மொய்சுதீன்‌ கோரி
  • மொய்சுதீன்‌ அடிமை என்ன நிஸ்பாவை கொண்டிருப்பார்‌? மொய்சு
  • சுல்தான்‌ சம்சுதீன்‌ இல்துமிஷின்‌ அடிமை என்ன நிஸ்பாவைக்‌ கொண்டிருப்பார்‌? ஷம்ஸி பண்டகன்‌
  • இல்துமிஷ்‌ குத்புதீன்‌ ஐபக்கின்‌ எந்த மகன்‌ ஆட்சிக்கு வருவதை தடுத்து தானே தில்லியின்‌ அரசராக அமர்ந்தார்‌? ஆரம்ஷா
  • இல்துமிஷின்‌ காலத்தில்‌ மங்கோலிய செங்கிஸ்கானுக்கும்‌ மத்திய ஆசியாவில்‌ யாருக்கும்‌ இடையே போர்‌ பகை இருந்தது? கவராஸ்மி ஷா ஜலாலுதீன்‌
  • யாருடைய ஆட்சியில்‌ அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்கா அறிமுகம்‌ செய்யப்பட்டது? இல்துமிஷ்‌
  • யாருடைய ஆட்சியில்‌ குதுப்மினார்‌ கட்டப்பட்டது? இல்துமிஷ்‌
  • இல்துமிஷின்‌ மகள்‌ பெயர்‌ என்ன? ரசியா சுல்தானா
  • ரசியா சுல்தானா ஆட்சியின்‌ காலகட்டம்‌ என்ன? 1236-1240
  • “குதிரை மீது ஆண்கள்‌ சவாரி செய்வதை போல்‌ கையில்‌ வில்‌ அம்புடன்‌, அரசப்‌ பரிவாரங்கள்‌ சூழ ரசியாவும்‌ சவாரி செய்தார்‌.தனது முகத்துக்கு திரையிடவில்லை” எனக்‌ கூறியவர்‌ யார்‌? இபின்‌ பதூதா
  • இபின்‌ பதூதா எந்த நாட்டைச்‌ சேர்ந்த பயணி? மொரோக்கோ நாடு
  • ரசியா சுல்தானா எந்த அபிசீனிய அடிமையை அமீர்‌-இ-அகுராக நியமித்தார்‌? ஜலாலுதீன்‌ யாகுத்‌
  • அமீர்‌-இ-அகுர்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன? குதிரை இலாயப்‌ பணித்துறை தலைவர்‌
  • நயிப்‌-இ-முல்க்‌ எனும்‌ பட்டத்தை சூட்டிக்‌ கொண்டவர்‌ யார்‌? உலுக்‌ கான்‌
  • உலுக்கான்‌ என்ன பெயரில்‌ தில்லி ஆட்சியை கைப்பற்றினார்‌? கியாஸ்‌-அல்‌-தின்‌ பால்பன்‌
  • கியாஸ்‌-அல்‌-தின்‌ பால்பனின்‌ காலகட்டம்‌ என்ன? 1265-1287.
  • தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும்‌ தோவாப்பிலும்‌ நிகழ்ந்த பால்பனின்‌ தாக்குதல்களை பற்றி குறிப்பிடுபவர்‌ யார்‌? பாரனி
  • புதிதாகப்‌ பணியில்‌ சேர்ந்த ஆப்கானியர்களுக்கும்‌ மற்றவர்களுக்கும்‌ என்ன பெயரில்‌ குத்தகை இல்லா நிலங்கள்‌ வழங்கப்பட்டு பயிரிடப்பட்டன? மஃப்ருஸி
  • வடமேற்கில்‌ மேவாரைச்‌ சுற்றி அடர்ந்த காட்டுப்‌ பகுதிகளில்‌ வாழ்ந்த இஸ்லாமியச்‌ சமூகம்‌ கொள்ளையிலும்‌ கொலையிலும்‌ ஈடுபட்டிருந்தது அதன்‌ பெயர்‌ என்ன? மியோ
  • மியோக்களை அழித்தவர்‌ யார்‌? பால்பன்‌
  • பால்பன்‌ தனக்கு பிடித்த எந்த அடிமையை வங்கத்தின்‌ ஆளுநராக நியமித்தார்‌? துக்ரில்‌ கான்‌
  • பால்பன்‌ துக்ரில்‌ கானை ஒடுக்குவதற்கு யாருடைய தலைமையில்‌ படைகளை அனுப்பினார்‌? ஆளுநர்‌ அமின்கான்‌
  • துக்ரில்‌ கானை கொன்றபின்பு யாரை வங்கத்தின்‌ ஆளுநராக பால்பன்‌ நியமித்தார்‌? புக்ரா கான்‌
  • மங்கோலியர்கள்‌ எந்த நூற்றாண்டில்‌ செங்கிஸ்கான்‌ தலைமையில்‌ ஒரு மிகப்பெரிய அரசாட்சியை நிறுவினர்‌? 12ஆம்‌ நூற்றாண்டு
  • எந்த ஆண்டு தில்லிக்கு ஒரு நல்லெண்ண குழுவை ஹுலுக்‌ கான்‌ அனுப்பி வைத்தார்‌? 1259
  • பால்பன்‌ முல்தான்‌ ஆளுநர்‌ பொறுப்பை யாரிடம்‌ அளித்திருந்தார்‌? மகன்‌ முகம்மது கான்‌
  • பால்பன்‌ எப்போது இறந்தார்‌? 1286
  • கில்ஜிக்கள்‌ வம்சம்‌ காலகட்டம்‌ என்ன? 1290-1320
  • ஜலாலுதீன்‌ கில்ஜியின்‌ கால கட்டம்‌ என்ன? 1290-1296
  • பால்பனின்‌ எந்த மகன்‌ சிற்றின்பத்தில்‌ மூழ்கி அரசராகும்‌ தகுதி அற்றவராக இருந்தார்‌? கைக்குபாத்‌
  • கைக்குபாத்‌ அரசராகும்‌ தகுதியற்றவராக இருந்ததால்‌ அவருடைய எந்த மகன்‌ அரசு கட்டிலில்‌ அமர்த்தப்பட்டார்‌? மகன்‌ கோமர்ஸ்‌
  • கைக்குபாத்தின்‌ பெயரால்‌ ஆட்சி செய்தவர்‌ யார்‌? ஜலாலுதீன்‌
  • ஜலாலுதீன்‌ ஓர்‌__ என்ற அடிப்படையில்‌ அவருக்கு எதிர்ப்பு இருந்தது? ஆப்கானியர்‌
  • எந்த வெற்றி தக்காணத்தில்‌ இருந்த யாதவ்‌ அரசின்‌ தலைநகர்‌ தேவகிரியைச்‌ சூறையாடுவதற்கு ஓர்‌ உந்துதலை ஜலாலுதீனுக்கு அளித்தது? மால்வா படையெடுப்பு
  • ஜலாலுதீன்‌ எந்த படையெடுப்பில்‌ கொல்லப்பட்டார்‌? தேவகிரி படையெடுப்பு
  • ஜலாலுதீன்‌ எத்தனை ஆண்டுகாலம்‌ ஆட்சி புரிந்தார்‌? 6 ஆண்டு காலம்‌
  • அலாவுதீன்‌ கில்ஜியின்‌ காலகட்டம்‌ என்ன? 1296- 1316
  • அலாவுதீன்‌ கில்ஜி காலத்தில்‌ கடைசி மங்கோலிய தாக்குதல்‌ எப்போது நிகழ்ந்தது? 1307-1308
  • தீபகற்பத்தில்‌ அலாவுதீன்‌ கில்ஜிக்கு அவருடைய முதல்‌ இலக்கு எதுவாக இருந்தது? தேவகிரி
  • கைப்பற்றுவதற்காக யாருடைய தலைமையில்‌ ஒரு பெரும்‌ படையை அனுப்பினார்‌? மாலிக்காபூர்‌
  • அலாவுதீன்‌ கில்ஜி எந்த ஆண்டு தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக படையை அனுப்பினார்‌? 1307
  • எந்த ஆண்டு வாரங்கல்லின்‌ காகதீய அரசர்‌ பிரதாப ருத்ரா தேவா தோற்கடிக்கப்பட்டார்‌? 1309
  • ஹொய்சாள அரசர்‌ மூன்றாம்‌ வீர வல்லாளன்‌ இப்போது தோற்கடிக்கப்பட்டார்‌? 1310
  • யாருடைய காலத்தில்‌ பிரபுக்கள்‌ குவித்து வைத்திருந்த செல்வம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டது? அலாவுதீன்‌ கில்ஜி
  • யாருடைய காலத்தில்‌ சுல்தானின்‌ ஒப்புதலோடு மட்டுமே பிரபு குடும்பங்களுக்கு இடையே திருமண உறவுகள்‌ அனுமதிக்கப்பட்டன? அலாவுதீன்‌ கில்ஜி
  • எந்த அரசர்‌ பரிசாகவும்‌ மதம்‌ சார்ந்த அறக்கொடையாகவும்‌ அளிக்கப்பட்டு சொத்துரிமை அடிப்படையில்‌ வைத்திருந்த கிராமங்களை மீண்டும்‌ அரசு அதிகாரத்தின்‌ கீழ்‌ கொண்டுவந்தார்‌? அலாவுதீன்‌ கில்ஜி
  • எந்த டெல்லி சுல்தான்‌ பரம்பரை கிராம அலுவலர்களின்‌ அதிகாரங்களை தடைசெய்தார்‌?’ அலாவுதீன்‌ கில்ஜி
  • நாற்பதின்மர்‌ கொண்ட குழுவை அமைத்தவர்‌ யார்‌? இல்துமிஷ்‌
  • நாற்பதின்மர்‌ கொண்ட குழுவை ஒழித்தவர்‌ யார்‌? பால்பன்‌
  • எந்த தில்லி சுல்தான்‌ காலத்தில்‌ மதுவும்‌ போதை மருந்துகளின்‌ பயன்பாடும்‌ தடை செய்யப்பட்டிருந்தது? அலாவுதீன்‌ கில்ஜி
  • அஞ்சல்‌ முறையை அறிமுகப்படுத்திய டெல்லி சுல்தான்‌ யார்‌? அலாவுதீன்‌ கில்ஜி
  • படைவீரர்களுக்கு கொள்ளையில்‌ பங்கு தராமல்‌ பணமாக ஊதியம்‌ வழங்கிய முதல்‌ சுல்தான்‌ யார்‌? அலாவுதீன்‌ கில்ஜி
  • அலாவுதீன்‌ யாரை தமது வாரிசாக நியமித்தார்‌? கிசர்‌ கான்‌
  • மாலிக்காபூர்‌ அரசாங்க அதிகாரத்தை எடுத்துக்‌ கொண்ட பின்பு எத்தனை நாட்களில்‌ பிரபுக்களால்‌ கொல்லப்பட்டார்‌? 35 நாட்கள்‌
  • காசி மாலிக்‌ என்ன பெயரில்‌ 1320ல்‌ ஆட்சியில்‌ அமர்ந்தார்‌? கியாசுதீன்‌ துக்ளக்‌
  • கியாசுதீன்‌ துக்ளக்கின்‌ காலகட்டம்‌ என்ன? 1320 – 1324
  • பிரபுக்கள்‌ வகுப்பினருடன்‌ சமரச கொள்கையை பின்பற்றியவர்‌ யார்‌? கியாசுதீன்‌ துக்ளக்‌
  • கியாசுதீன்‌ துக்ளக்‌ எப்போது இறந்தார்‌? 1325
  • முகமது பின்‌ துக்ளக்‌ என்னும்‌ பட்டத்தைச்‌ சூட்டிக்‌ கொண்டு கியாசுதீன்‌ துக்ளக்‌ இறந்தபின்‌ ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றவர்‌ யார்‌? ஜான்கான்‌
  • முகமது பின்‌ துக்ளக்கின்‌ காலகட்டம்‌ என்ன? 1324-1351
  • முகமது பின்‌ துக்ளக்‌ தனது தலைநகரை தில்லியில்‌ இருந்து எங்கு மாற்றினார்‌? தெளலதாபாத்‌
  • எங்கு உள்ள இடத்திற்கு முகமது பின்‌ துக்ளக்‌ தெளலதாபாத்‌ என பெயர்‌ சூட்டினார்‌? மகாராஷ்ட்ராவில்‌ உள்ள தேவகிரிக்கு
  • அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌? முகமது பின்‌ துக்ளக்‌
  • வேளாண்மையை கவனித்துக்கொள்ள ஒரு தனித்‌ துறையை உருவாக்கியவர்‌ யார்‌? முகமது பின்‌ துக்ளக்‌
  • முகமது பின்‌ துக்ளக்‌ உருவாக்கிய வேளாண்மை துறையின்‌ பெயர்‌ என்ன? திவான்‌-இ-அமிர்‌- ஹி
  • முகமது பின்‌ துக்ளக்‌ எப்போது இறந்தார்‌? 1351
  • பெரோஸ்‌ துக்ளக்கின்‌ காலகட்டம்‌ என்ன? 1351 -1388
  • சர்வீஸ்‌ துக்ளக்கின்‌ தந்தையார்‌? ரஜப்‌, கியாசுதீன்‌ துக்ளக்கின்‌ தம்பி
  • கியாசுதீன்‌ ஆட்சிக்கு வந்தபோது பெரோஸ்‌ துக்ளக்‌ எத்தனை குதிரை வீரர்களை கொண்ட சிறப்பு படைக்கு தளபதி ஆனார்‌? 12,000 குதிரை வீரர்கள்‌
  • பெரோஷ்‌ துக்ளக்கிடம்‌ ஓர்‌ உயர்‌ அதிகாரியாக இருந்து இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர்‌ யார்‌? கான்‌-இ-ஜஹன்‌
  • கான்‌-இ-ஜஹன்‌ ஆதியிலே என்னவாக அறியப்பட்டார்‌? கண்ணு
  • அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்தும்‌ முறையை மீண்டும்‌ அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌? பெரோஸ்‌ துக்ளக்‌
  • அடிமைகள்‌ நலன்களை கவனிப்பதற்காக தனியே ஓர்‌ அரசுத்‌ துறையை ஏற்படுத்திய தில்லி சுல்தான்‌ யார்‌? பெரோஸ்‌ துக்ளக்‌
  • எத்தனை அடிமைகளின்‌ நல்‌ வாழ்க்கையில்‌ அடிமைகள்‌ நலத்துறை அக்கறை காட்டியது? 1,80,000
  • பெரோஷ்‌ துக்ளக்‌ காலத்தில்‌ நடந்த ஒரே பெரிய ராணுவப்‌ படை எடுப்பு எப்போது எதன்‌ மீது தொடுக்கப்பட்டது? சிந்து (1362)
  • இஸ்லாமியர்‌ அல்லாதவருக்கு ஜிஸியா எனும்‌ வரியை விதித்த தில்லி சுல்தான்‌ யார்‌? பெரோஸ்‌ துக்ளக்‌
  • பெரோஸ்‌ துக்ளக்‌ காலத்தில்‌ எந்த நதியிலிருந்து ஹன்சிக்கு கால்வாய்‌ வெட்டப்பட்டது? சட்லஜ்‌ நதி
  • முதன்முறையாக இஸ்லாமியர்‌ அல்லாதோர்‌ மீது ஜெசியா வரி விதித்தவர்‌ யார்‌? குத்புதீன்‌ ஐபக்‌
  • 16ம்‌ நூற்றாண்டில்‌ ஜிஸியா வரியை ஒழித்த முகலாய மன்னர்‌? அக்பர்‌
  • மீண்டும்‌ ஜிஸ்யா வரியைக்‌ கொண்டு வந்த முகலாய மன்னர்‌ யார்‌? அவுரங்கசீப்‌
  • யாருடைய ஆட்சியின்‌ போது மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின்‌ படையெடுப்பு நிகழ்ந்தது? நசுருதின்‌ முகமது ஷா
  • கடைசி துக்ளக்‌ அரசன்‌ யார்‌? நசுருதின்‌ முகமது ஷா
  • பஞ்சாப்‌ போரின்‌ போது தன்‌ நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு யாரை தைமூர்‌ நியமித்திருந்தார்‌? கிசர்கான்‌
  • சையது வம்சம்‌ யாரால்‌ நிறுவப்பட்டது? கிசர்‌ கான்‌
  • தாரிக்‌-இ-முபாரக்‌-சாஹி என்ற நூலை எழுதியவர்‌ யார்‌? யாஹியா பின்‌-அஹ்மத்‌ சிரிந்தி
  • ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே முழுமையாக 30 ஆண்டுகள்‌ மன நிறைவோடும்‌ அமைதியாகவும்‌ வாழ்ந்த ஒரே சுல்தான்‌ எந்த வம்சத்தைச்‌ சார்ந்தவர்‌? சையது வம்சம்‌
  • ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே முழுமையாக 30 ஆண்டுகள்‌ மன நிறைவோடும்‌ அமைதியாகவும்‌ வாழ்ந்த ஒரே சுல்தான்‌ யார்‌? ஆலம்ஷா
  • லோடி வம்சத்தின்‌ காலகட்டம்‌ என்ன? 1451-1526
  • லோடி வம்சம்‌ ஆட்சியை நிறுவியவர்‌ யார்‌? பஹ்லோல்‌ லோடி
  • கடைசி லோடி ஆட்சியாளர்‌ யார்‌? இப்ராஹிம்‌ லோடி
  • “பூமியில்‌ கடவுளின்‌ பிரதிநிதியாக தாம்‌ ஆட்சி செய்வதாக” கூறிய தில்லி சுல்தான்‌ யார்‌? பால்பன்‌
  • மதத்தின்‌ பரிந்துரைகள்‌ குறித்து தாம்‌ கவலைப்படவில்லை என கூறிக்கொண்டு முழு அதிகாரத்தை கோரிய தில்லி சுல்தான்‌ யார்‌? அலாவுதீன்‌ கில்ஜி
  • சுல்தான்களின்‌ சொந்த படை குழுக்களின்‌ அதிகாரிகள்‌ எவ்வாறு அழைக்கப்பட்டன? ஹஷ்ம்‌-இகால்ப்‌
  • பரம்பரையாக வரி வசூலித்து வவந்தோர்‌ தற்போது எவ்வாறு அழைக்கப்படுகின்றன? செளத்ரிகள்‌
  • டெல்லி சுல்தான்‌ அரசு மக்கள்‌ தொகையை யார்‌ மூலம்‌ கட்டுப்படுத்த விரும்பியது? முக்தி எனும்‌ மாகாண ஆளுநர்கள்‌
  • லிங்காயத்‌ பிரிவு எந்த நூற்றாண்டில்‌ நிறுவப்பட்டது? 13ஆம்‌ நூற்றாண்டு
  • லிங்காயத்‌ பிரிவை நிறுவியவர்‌ யார்‌? பசவண்ணர்‌ கர்நாடகம்‌
  • தென்னிந்திய பக்தி இயக்கத்தையும்‌ ஓரிறைக்‌ கொள்கையும்‌ வட இந்தியாவுக்கு கொண்டு சென்ற இரண்டு பேர்‌ யார்‌? மகாராஷ்டிராவைச்‌ சேர்ந்த நாமதேவர்‌ மற்றும்‌ ராமானுஜரை பின்பற்றிய ராமானந்தர்‌
  • தமது தங்க நாணயங்கள்‌ சிலவற்றில்‌ பெண்‌ கடவுள்‌ லட்சுமியின்‌ உருவத்தை பொறித்தவர்‌ யார்‌? முகமது கோரி
  • சமணத்‌ துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும்‌ பாதுகாப்பு அளிக்க வேண்டும்‌ என ஆணையை வெளியிட்ட தில்லி சுல்தான்‌ யார்‌? முகமது பின்‌ துக்ளக்‌
  • “பல கடவுள்‌ வழிபாட்டாளர்களையும்‌ இந்துக்களையும்‌ மங்கோலியர்களையும்‌ நாத்திகர்களையும்‌, பஞ்சனையில்‌ அமரவைத்து சகல மரியாதைகளும்‌ செய்கிறார்கள்‌ “என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள்‌ குறித்து வெறுப்புடன்‌ எழுதியவர்‌ யார்‌? பாரனி
  • இந்துக்களுக்கு இஸ்லாமியர்களுக்கு நிகராக என்னென்ன அரசு பட்டங்கள்‌ வழங்கப்படுவதாக பரணி எழுதுகிறார்‌? ராய்‌, ராணா, தாகூர்‌,ஷா,மஹ்தா, பண்டிட்‌
  • “மேற்கு எல்லைப்‌ பகுதிகளில்‌ மங்கோலியப்‌ படையெடுப்புகள்‌ வெற்றிபெற்ற போதிலும்‌ தரையிலும்‌ கடலிலும்‌ நிகழ்ந்த இந்தியாவின்‌ அயல்‌ வணிகம்‌ இக்காலத்தில்‌ கணிசமாக வளர்ச்சி பெற்றது” எனக்‌ கூறியவர்‌ யார்‌? இர்பான்‌ ஹபீப்‌
  • காகிதம்‌ தயாரிக்கும்‌ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள்‌ யார்‌? சீனர்கள்‌
  • நூற்பு சக்கரத்தை கண்டுபிடித்தவர்கள்‌ யார்‌? சீனர்கள்‌
  • பதினைந்தாம்‌ நூற்றாண்டில்‌ எங்கு பட்டுப்புழு வளர்ப்பு நிறுவப்பட்டது? வங்கம்‌
  • உயர்கல்வியின்‌ மேலும்‌ ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தின்‌ பெயர்‌ என்ன? மதராஸா
  • மதராஸா என்பதன்‌ பொருள்‌ என்ன? கற்றுக்கொள்ளுகிற இடம்‌
  • தில்லியில்‌ ஒரு பெரிய மதரஸாவை கட்டியவர்‌ யார்‌? ஃபெரோஸ்‌ துக்ளக்‌
  • அரேபியரின்‌ சிந்து படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூலின்‌ பெயர்‌ என்ன? சச்நாமா
  • எப்போது கலீபா பதவி ஒழிக்கப்பட்டது? 1920
  • 1,80,000 அடிமைகள்‌ வைத்திருந்ததற்காக புகழ்பெற்ற தில்லி சுல்தான்‌ யார்‌? பெரோஸ்‌ துக்ளக்‌
  • குவ்வாத-உல்‌-இசுலாம்‌ மசூதியும்‌, அத்ஹை-தின்‌-கஜோப்ராவும்‌ யாருடைய காலத்தில்‌ கட்டப்பட்டது? குத்புதீன்‌ ஐபக்‌
  • யாருடைய கல்லறை முதல்‌ மெய்யான விளைவால்‌ அலங்கரிக்கப்பட்டது? பால்பனின்‌ கல்லறை
  • அலாய்‌ தர்வாஸா கட்டியவர்‌ யார்‌? அலாவுதீன்‌ கில்ஜி
  • என்ன இசைக்கருவிகளை இஸ்லாமியர்‌ அறிமுகப்படுத்தினர்‌? ரபாப்‌, ஸாரங்கி
  • இந்திய இசை உலகில்‌ உள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும்‌ மேம்பட்டது என வெளிப்படையாக அறிவித்தவர்‌ யார்‌? அமிர்குஸ்ரு
  • மிகப்பெரும்‌ இசைஞராக கருதப்பட்ட சூபி துறவி யார்‌? பிர்போதன்‌
  • எந்த இந்திய சமஸ்கிருத இசை நூல்‌ பாரசீக மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்‌ எது? ராக்‌ தர்பான்‌
  • இசைஞர்‌ நுஸ்ரத்‌ காட்டன்‌, நடனக்காரர்‌ மிர்‌ அஃப்ரோஸ்‌, யாருடைய அவையில்‌ இருந்ததாக பரணி குறிப்பிடுகிறார்‌? ஜலாலுதீன்‌ கில்ஜி
  • தமது ஒன்பது வானங்கள்‌ எனும்‌ நூலில்‌ தம்மை ஓர்‌ இந்தியன்‌ என அழைத்துக்‌ கொள்வதில்‌ பெருமிதம்‌ கொண்டவர்‌ யார்‌? அமிர்குஸ்ரு
  • ஒன்பது வானங்கள்‌ என்னும்‌ நூலை எழுதியவர்‌ யார்‌? அமிர்குஸ்ரு
  • இல்துமிஷ்‌ கட்டி முடித்த போது குதுப்‌ மினாரின்‌ உயரம்‌ என்ன? 72.5 மீட்டர்‌
  • யாருடைய பழுது நீக்கும்‌ பணி களால்‌ குதுப்மினாரின்‌ உயரமும்‌ 74 மீட்டர்‌ ஆக உயர்ந்தது? பெரோஸ்‌ ஷா துக்ளக்‌
  • ஃபவாய்‌ துல்‌ ஃபவாத்‌ எனும்‌ நூல்‌ யாருடைய உரையாடல்களை கொண்டது? சூஃபி துறவி நிஜாமுதீன்‌ அவுலியா
  • ஃபவாய்‌ துல்‌ ஃபவாத்‌ என்ற நூலை தொகுத்தவர்‌ யார்‌? அமிர்‌ ஹாஸ்ஸன்‌
  • பாரசீக உரைநடையின்‌ ஆசானாக கருதப்படுபவர்‌ யார்‌? விடையை கீழே கமெண்ட் செய்யவும்
  • ஃபுதூ உஸ்‌ சலாதின்‌ என்பது யாருடைய கவிதைத்தொகுப்பு? அப்துல்மாலிக்‌ இஸ்லாமி
  • ஃபரங்‌-இ-கவாஸ்‌ இயற்றிய வர்‌ யார்‌? ஃபக்ரூத்தின்‌ கவ்வாஸ்‌
  • மிஃப்தஹூ-।-ஃபுவாஜலா இயற்றியவர்‌ யார்‌? முகம்மத்‌ ஷதியாபடி
  • பாரசீக மொழியில்‌ மொழிபெயர்த்த சமஸ்கிருத கதைகளின்‌ தொகுப்பின்‌ பெயர்‌ என்ன? துதிநமஹ
  • பாரசீக மொழியில்‌ மொழிபெயர்த்த சமஸ்கிருத கதைகளைத்‌ தொகுத்தவர்‌ யார்‌? ஜியா நக்ஷ்பி
  • கிளி நூல்‌ என்று அழைக்கப்படும்‌ நூல்‌ எது? துதிநமஹ
  • எந்த கல்வெட்டு சுல்தான்‌ பால்பனின்‌ நல்லாட்சியின்‌ விளைவாக விஷ்ணு பகவான்‌ எந்த கவலையுமின்றி பாற்கடலில்‌ துயில்கிறார்‌ எனக்‌ கூறுகிறது? பால பவோலி கல்வெட்டு
  • கதாகெளடுக என்ற நூலை எழுதியவர்‌ யார்‌? விடையை கீழே கமெண்ட் செய்யவும்
  • காஷ்மீர அரசர்களின்‌ வரலாற்றைப்‌ கூறும்‌ நூல்‌ எது? ஜைனவிலாஸ்‌
  • ஜைனவிலாஸ்‌ நூலை எழுதியவர்‌ யார்‌? பட்டவதார
  • பட்டவதார, ஜைனவிலாஸ்‌ நூலை இயற்றுவதற்கு எந்த நூலை முன்மாதிரியாகக்‌ கொண்டார்‌? ஷா நாமா
  • ஷா நாமா எனும்‌ நூலை எழுதியவர்‌ யார்‌? ஃபிர்தெளசி

இந்த 250 டெல்லி சுல்தான்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் உங்களுக்கு TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த வினா விடைகள் மூலம் நீங்கள் டெல்லி சுல்தான்கள் வரலாற்றை மற்றும் அவளுடைய ஆட்சியை சிறப்பாக அறிந்துகொள்ள முடியும்.


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 PDF Collections:

🚀 250 டெல்லி சுல்தான்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

Tamil Mixer Education

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version