Google Newsல் Follow பண்ணுங்க உடனுக்குடன் தகவலை பெறுங்கள். Follow Now

TNPSC குரூப் 1, 2 & 2A தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு

TNPSC குரூப் 1, 2 & 2A தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு

TNPSC Group 1, 2 & 2A Exam Results Table Release

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்

TNPSC குரூப் 1, 2 & 2A தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு

முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 21.05.2022 மற்றும் 25.02.2023 ஆகிய தேதிகளில் குரூப்-II மற்றும் IIA பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தியது.

அப்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 2022 ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில கால தாமதத்தின் நிமித்தம் இந்த தேர்வுக்கான முடிவுகளை டிசம்பர் 2023 இல் வெளியிட TNPSC வாரியம் முடிவு செய்துள்ளது.

அதேபோல், குரூப்-VII-B சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-III நிர்வாக அதிகாரிக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 2023 இல் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான தேர்வு கடந்த 2022 செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடத்தப்பட்டிருந்தது.

அதே போல குரூப்-வி சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு செயலகப் பணிக்கான முடிவுகள் ஜூன் 2023ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் குரூப் தேர்வு முடிவுகளை அடுத்து வரும் மாதங்களில் பெறலாம்.

OFFICIAL NOTIFICATION