மராத்தியர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் உங்களின் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும். மராத்தியர்கள் வரலாற்றின் முக்கியமான பாகமாக இருக்கின்றனர், மற்றும் அவர்கள் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த தொகுப்பில் 200+ மராத்தியர்கள் பற்றிய வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது, இது உங்களுக்கு பொதுவான அறிவு மற்றும் வரலாறு பிரிவுகளில் அதிக முன்னேற்றம் கொடுக்கும்.
இந்த வினா விடைகளின் சிறப்பம்சங்கள்:
- 📚 மராத்தியர்களின் வரலாறு மற்றும் ஆட்சிப் பயணம்
- 📝 மராத்தியர்கள் பற்றிய பொதுவான அறிவு மற்றும் வரலாற்று கேள்விகள்
- 🎯 TNPSC, UPSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள தகவல்கள்
- 💡 மராத்தியர்கள் ஆட்சியின் முக்கிய அம்சங்கள்
200+ மராத்தியர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்
- மராத்திய தளபதிகளுள் தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டவர் யார்? வெங்கோஜி
- எந்த ஆண்டு தஞ்சாவூரில் மராத்தியர் ஆட்சி தொடங்கியது? 1674
- மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? கொங்கணம்
- சிவாஜிக்கு முந்தைய காலத்தில் மராத்தியர்கள் யாரின் கீழ் செயல்பட்டனர்? பாமினி சுல்தான்கள்
- “மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமண சமயம் சார்ந்ததாக இல்லை.அமைப்புகள் சடங்குகள் வகுப்பு வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தை பொருத்த அளவில் வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறானதாக அது அமைந்தது. துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பைச் சாராமல் சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் ” என கூறியவர் யார்? நீதிபதி ரானடே
- சிவாஜி அரசின் தலைநகராக விளங்கியது எது? ராய்கர்
- சிவாஜி எங்கு பிறந்தார்? ஜூன்னார் இடத்திற்கு அருகே ஷிவ்னர் என்ற பகுதியில்
- சிவாஜியின் தாய் தந்தை யார்? ஷாஜி போன்ஸ்லே, ஜீஜாபாய்
- சிவாஜி தனது தாய் வழியில் யாருடைய வழித்தோன்றலாக இருந்தார்? தேவகிரி ஆண்ட யாதவ மன்னர்கள்
- சிவாஜி தனது தந்தை வழியில் யாருடைய வழித்தோன்றலாக இருந்தார்? மேவாரின் சிசோடியாக்கள்
- அகமதுநகர் அகமது ஷாவின் அபிசீனியா அமைச்சராக இருந்தவர் யார்? மாலிக் ஆம்பர்
- யாரிடம் ஷாஜி போன்ஸ்லே சேவை புரிந்தார்? மாலிக் ஆம்பர்
- சிவாஜி யாருடைய பராமரிப்பில் இருந்தார்? பூனாவில் இருந்த ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகீர்தாரான தாதாஜி கொண்டதேவ்
- ராணுவம் மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் எது? ஜாகிர்
- சிவாஜி யாரை தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்தினார்? துறவி ராம்தாஸ்
- தனது எத்தனையாவது வயதில் சிவாஜி ராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்? 19வயது
- எந்த ஆண்டு தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து சிவாஜி கைப்பற்றினார்? 1646
- எப்போது தாதாஜி கொண்டதேவ் மறைந்தார்? 1647
- சிவாஜியின் தந்தையை சிறையில் அடைத்தவர் யார்? பீஜப்பூர் சுல்தான்
- சிவாஜி யாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் முகலாய சேவையில் சேர விருப்பம் தெரிவித்தார். தக்காணத்தின் முகலாய அரசப் பிரதிநிதியாக இருந்தவர்? இளவரசர் மூராத்
- எந்த ஆண்டு பீஜப்பூர் சுல்தான் சாஜியை விடுதலை செய்தார்? 1649
- எந்த ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் சிவாஜி ராணுவ செயல்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருந்தார்? 1649 முதல் 1655 வரை
- பிரதாப்கர் கோட்டை எங்கு கட்டப்பட்டது? ஜாவ்லி சதாரா மாவட்டம்
- பீஜப்பூர் சுல்தான் முகமது அடில்ஷா எப்போது மரணமடைந்தார்? நவம்பர் 1656
- முகமது அடில் ஷா மரணம் அடைந்த பின்பு அடுத்து பொறுப்பை ஏற்றவர் யார்? இரண்டாம் அடில்ஷா 18 வயது
- எந்த ஆண்டு பீடார் கல்யாணி பரிந்தர் ஆகியவற்றை அவுரங்கசீப் கைப்பற்றினார்? 1657
- சிவாஜியின் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து அஃப்சல்கான அந்த பணியில் ஈடுபடுத்தியவர் யார்? பீஜப்பூர் சுல்தான்
- “மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியில் கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக “சூளுரைத்தவர் யார்? அஃப்சல்கான்
- எந்த ஆண்டு சிவாஜி மற்றும் அஃப்சல்கான் இடையே சண்டை நடந்து? 1659
- எப்போது ஒளரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறினார்? ஜூலை மாதம் 1658
- எந்த ஆண்டு செயிஷ்டகான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்? 1660
- பூனாவுக்கு 400 படைவீரர்களுடன் திருமண குழுவினர் போல் சென்று சிவாஜி யாரை தாக்கினார்? செயிஷ்டகான்
- அரபிக்கடல் பகுதியில் முகலாயரின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகர் எது? சூரத்
- சிவாஜி சூரத் மீது எப்போது தாக்குதல் நடத்தினார்? 1664
- யாருடைய தலைமையில் பீஜப்பூரை இணைப்பதற்காகவும சிவாஜியை வீழ்த்துவதற்காகவும் ஒளரங்கசீப் ராணுவத்தை அனுப்பினார்? ராஜா ஜெய்சிங்
- இரண்டாம் பகதூர் ஷா என அழைக்கப்பட்டவர் யார்? இளவரசர் மூவாசம்
- புரந்தர் உடன்படிக்கை எப்போது ஏற்படுத்தப்பட்டது? ஜூன் 11 1665
- புரந்தர் உடன்படிக்கையின்படி சிவாஜி முகலாயரின்கீழ் என்னவாக செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற உதவ ஒப்புக் கொண்டார்? மன்சப்தார்
- சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் செய்யும் எப்போது கைது செய்யப்பட்டனர்? மே மாதம் 1666
- எந்த ஆண்டு முதல் சிவாஜி தீவிர போர் கொள்கையைக் கடைபிடிக்கலானார்? 1666
- சிவாஜியின் கீழ் சாம்பாஜி என்ன படிநிலையில் நியமிக்கப்பட்டார்? மன்சப்தார் ஐந்தாயிரம்
- எந்த ஆண்டு சூரத்தில் இருந்து செளத் எனப்படும் நான்கில் ஒரு பங்கு வருமானத்தை வருடாந்திர கப்பமாக மராத்தியர் பெற்றனர்? 1672
- எப்போது சிவாஜி அரியணை ஏறினார்? ஜூன் 6 1674
- சிவாஜி என்ன பட்டத்தை சூட்டிக்கொண்டார்? சத்ரபதி
- சிவாஜி எந்தக் கோட்டையில் அரசராக அரியணை ஏறினார்? ராய்கார் கோட்டை
- சிவாஜி எந்த சுல்தானுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்? கோல்கொண்டா சுல்தான்
- வெங்கோஜியின் வேறு பெயர் என்ன? இகோஜி
- வெங்கோஜியை தஞ்சாவூரை நிர்வகிக்குமாறு பணித்தவர் யார்? சிவாஜி
- மராத்தியர்களுக்கு இரண்டாம் கட்ட பாதுகாப்பு அரணாக திகழ்ந்த இடம் எது? செஞ்சி
- சிவாஜிக்கு எதிராக முகலாய முகாமில் இணைந்த மர்த்திய அரசர் யார்? சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜி
- சாம்பாஜி அவுரங்கசீப் பால் சிறைபிடிக்கப்பட்டு எந்த கோட்டைக்கு அனுப்பப்பட்டார்? பன்ஹலா கோட்டை
- இளவரசர் இரண்டாம் அக்பருக்கு பாதுகாப்பு கொடுத்தவர் யார்? சாம்பாஜி
- எந்த ஆண்டு சாம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்? 1689
- சாம்பாஜியின் மறைவிற்குப் பிறகு செஞ்சிக் கோட்டையில் இருந்து சண்டையை தொடங்கியவர் யார்? சாம்பாஜியின் இளவல் இராஜாராம்
- ராஜாராம் எப்போது மரணம் அடைந்தார்? 1700
- ராஜாராமின் முதல் மனைவி யார்? தாராபாய்
- எந்த ஆண்டு அவுரங்கசீப் இறந்தார்? 1707
- அவுரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு விடுதலையான சாம்பாஜியின் மகன் யார்? சாஹூ
- யாருக்கிடையே 1708 ஆம் ஆண்டு உள்நாட்டு கலகம் மராத்தியர்கள் இடையே நடைபெற்றது? சாம்பாஜியின் மகன் சாஹூ மற்றும் ராஜாராமின்வின் முதல் மனைவி தாராபாய்
- எந்த ஆண்டு சாஹூ அரியணை ஏறினார்? 1708
- சாகு அரசராக அரியணை ஏறுவதற்கு ஆதரவாக இருந்தவர் யார்? பாலாஜி விஸ்வநாத்
- பாலாஜி விஸ்வநாத் எப்போது பஷ்வாவாக நியமிக்கப்பட்டார்? 1713
- கோல்காபூரை தலைநகராகக் கொண்டு ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தியவர் யார்? தாராபாய்
- ராஜாராமின் இரண்டாவது மனைவி மற்றும் மகன்? ராஜாபாய் மற்றும் இரண்டாம் சாம்பாஜி
- எந்த ஆண்டு சாஹூ மறைந்தார்? 1749
- சாஹூ மறைந்த பின் அரியணை ஏறியவர் யார்? ராமராஜா
- தாராபாய் எப்போது மரணம் அடைந்தார்? 1761
- ராமராஜா எப்போது மரணம் அடைந்தார்? 1777
- ராம ராஜாவின் தத்துப் புதல்வர் யார்? இரண்டாவது சாகஹூ
- இரண்டாவது சாஹூ எப்போது மரணமடைந்தார்? 1808
- இரண்டாவது சாஹூவிற்குபின் அரியணை ஏறிய அவர் யார்? பிரதாப் சிங்
- பிரதாப் சிங்கை சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி எந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருந்து அவரை நீக்கியது? 1839
- பிரதாப்சிங் எப்போது மரணம் அடைந்தார்? 1847
- இரண்டாம் சஷாஜி எப்போது மரணம் அடைந்தார்? 1848
- சிவாஜியின் அரசவையின் பெயர் என்ன? அஷ்டப்பிரதான்
- நாட்டின் பொது நலன்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது எந்த அதிகாரியின்னுடைய கடமை? பிரதம மந்திரி
- மராட்டியர் ஆட்சியில் பிரதம மந்திரி இவ்வாறு அழைக்கப்பட்டார்? முக்கிய பிரதான் அல்லது பேஷ்வா
- மராத்தியர் ஆட்சி யில் அரசின் அனைத்து கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது யாருடைய வேலை? நிதியமைச்சர்
- மராட்டியர் ஆட்சியில் நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமத்யா
- அரசரின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரிப்பவர்: யார்? மந்திரி அல்லது வாக்கியநாவிஸ்
- மராட்டியர் ஆட்சியில் வெளியுறவுச் செயலர் மன்னருக்குப் போர் மற்றும் அமைதி குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கியவர் யார்? சுமந்த அல்லது டாபிர்
- பிற நாடுகளின் தூதர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பொறுப்பை ஏற்றிருந்த மராட்டிய அதிகாரி யார்? சுமந்த அல்லது டாபிர்
- உள்துறை செயலர், அரசரின் அன்றாட கடிதப் போக்குவரத்தை கவனித்துக் கொண்டதோடு வரைவுகளை திருத்தும் அதிகாரம் கொண்டிருந்தவர் யார்? சச்சிவ் அல்லது சுருநாவிஸ்
- பர்கானாக்களின் கணக்குகளை சரிபார்த்த அதிகாரி யார்? சச்சிவ் அல்லது சுருநாவிஸ்
- சமூக சட்ட திட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு நீதிபதியாக இருந்தவர் மற்றும் மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களும் பொறுப்பேற்றிருந்த வர் யார்? பண்டிட்ராவ்
- பண்டிட்ராவிற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்னென்ன? தனத்தியாக்சா, சதர், முதாசீப், மதத்தலைவர்’
- குடிமை மற்றும் ராணுவ நீதிக்குப் பொறுப்பேற்று இருந்தவர் யார்? நியாயதீஷ் அல்லது தலைமை நீதிபதி
- ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு அமைப்புரீதியாக பராமரிப்பது ராணுவத்தை நிர்வகிப்பது ஆகியவற்றை கவனித்துக் கொண்டவர் யார்? சாரிநெளபத் அல்லது தலைமை தளபதி
- எந்த இரு அதிகாரிகளைத் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராணுவத்தையும் வழி நடத்துவதற்கு தலைமை ஏற்பது பயணங்களுக்கும் தலைமை ஏற்கவேண்டும்? நியாயத்தீஷ் மற்றும் பண்டிட்ராவ்
- நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது அரசை எத்தனை மாகாணங்களாக பிரித்தார்? நான்கு மாகாணங்கள்
- மாகாணங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன? பிராந்த்
- மராத்தியர் ஆட்சியில் மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக எத்தனை சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது? 30%
- மராட்டியர் ஆட்சியில் 30 சதவீதமாக இருந்த வரி பின்பு எவ்வளவு சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டது? 40%
- சிவாஜி தனது அண்டை பகுதிகளிலிருந்து வசூலித்த இரண்டு வரிகள் என்னென்ன? செளத் மற்றும் சர்தேஷ்முகி
- மராட்டியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்காக வசூலிக்கப்பட்ட வரியின் பெயர் என்ன? செளத்
- சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் எத்தனை சதவீதத்தை சந்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார்? 10%
- தேசாய்கள் தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாகக் திறந்தவர் யார்? சர்தேஷ்முக்
- ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படை பிரிவிற்கு பெயரென்ன? நாயக் அல்லது கார்பரல்
- யாருடைய தலைமையின் கீழ் சார்ஜண்ட் பகுதிக்கு இணையான 25 குதிரைப்படை வீரர்கள் செயல்பட்டனர்? ஹவில்தார்
- ஒரு ஜமால்தாரின்கீழ் எத்தனை ஹவில்தார் கள் செயல்பட்டனர்? ஐந்து ஹவில்தார்
- பத்து ஜமால்தார்களின் தலைவராக திகழ்ந்தவர் யார்? ஒரு ஹஜாரி
- குதிரைப் படையின் தலைமை தளபதி யார்? சாரிநெளபத்
- அரசு மூலமாக குதிரைகள் வழங்கப்பட்ட படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பர்கீர்கள்
- தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? ஷைலேதார்கள்
- கிரிமினல் வழக்குகளை விசாரித்த அதிகாரிகள் யார்? பட்டேல்கள்
- இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது எது? ஹாஜிர்மஜ்லிம்
- பேஷ்வா என்பது எந்த மொழிச்சொல்? பாரசீகம்
- பேஷ்வா என்ற சொல்லின் பொருள் என்ன? முதன்மையான அல்லது பிரதம அமைச்சர்
- பேஷ்வா ஆட்சியின் காலகட்டம் என்ன? 1713 முதல் 1818 வரை
- முதல் பேஷ்வாவாக அறியப்படுபவர் யார்? பாலாஜி விஸ்வநாத்
- பாலாஜி விசுவநாத்தின் காலம் என்ன? 1713 முதல் 1720
- உள்நாட்டுப் போரின்போது தாராபாய்க்கு ஆதரவு தெரிவித்திருந்த கடற்படைத் தளபதி யார்? கனோஜி ஆங்கிரே
- யாருடைய ஆட்சிக்காலத்தில் ஜாகீர்கள் வழங்கும் நடைமுறை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது? பாலாஜி விஸ்வநாத்
- 1720 இல் மன்னர் சாஹலூவால் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டவர் யார்? முதலாம் பாஜிராவ்
- முதலாம் பாஜிராவ் இன் காலகட்டம் என்ன? 1720 முதல் 1740 வரை
- 1731ல் மரோடா அருகே தபாய் என்ற இடத்தில் முதலாம் பாஜிராவ் ஆல் கொல்லப்பட்ட தலைமை தளபதி யார்? திரிம்பக்ராவ்
- வார்னா ஒப்பந்தம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1731
- பாலாஜி பாஜிராவ் இன் காலகட்டம் என்ன? 1740 முதல் 1761 வரை
- பாலாஜி பாஜிராவ் எவ்வாறு அழைக்கப்பட்டார்? நானாசாகிப்
- திருச்சிராப்பள்ளியை கைப்பற்றிய பிறகு தஞ்சாவூரை முற்றுகையிடப் போவதாக அச்சுறுத்திய ஆற்காடு நவாபின் மருமகன் யார்? சந்தாசாகிப்
- எந்த ஆண்டு ரகுஜி போன்ஸ்லே ஆற்காடு நவாப் தோஸ்த் அலியை கொன்றார்? 1740
- உத்கிர்போர் நடைபெற்ற ஆண்டு? 1760
- ஆப்கானிஸ்தானில் துராணி சாம்ராஜ்யத்தை நிறுவியவர் யார்? அகமது ஷா அப்தாலி
- பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது? 1757
- பிளாசிப் போரில் மராத்தியர் யாருக்கு உதவவில்லை? சிராஜ் உத் தெளலா
- மூன்றாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது? 1761 ஜனவரி 14
- நாதிர்ஷா எப்போது கொல்லப்பட்டார்? 1747
- பஞ்சாப் ஆளுநராக முகலாய மன்னரால் நியமிக்கப்பட்டவர் யார்? மீர்மன்னு
- மீர்மன்னுவின் மரணத்திற்குப் பிறகு யாரை பஞ்சாப் ஆளுநராக மீர்மன்னுவின் மனைவி நியமித்தார்? மீர்முனிம்
- மீர்முனிம் பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தால் சினம் கொண்டு பஞ்சாபை கைப்பற்றியவர் யார்? அகமது ஷா அப்தாலி
- தில்லியில் தனது பிரதிநிதியாக அகமது ஷா அப்தாலி யாரை நியமனம் செய்தார்? மீர்பக்ஷி
- தில்லியில் அகமது ஷா அப்தாலி நியமித்த பிரதிநிதியை அகற்றியவர்கள் யார்? ரகுநாத ராவ் மற்றும் மல்ஹர் ராவ் ஹோல்கர்
- மகாதஜி சிந்தியாவின் சகோதரரான தத்தாஜி சிந்தியாவை அகமது ஷா அப்தாலி எப்போது கொன்றார்? 1760
- பேஷ்வா படைகளுக்கு எதிராகத் அகமது ஷா அப்தாலி யாருடன் கூட்டணி வைத்து போரிட்டார்? ரோகில்கண்டின் நஜீப் உத் தெளலா மற்றும் அயோத்தியின் ஷூஜா உத் தெளலா
- முகலாய மன்னர் இரண்டாம் ஆலம்கீர் கொல்லப்பட்ட பின்பு யார் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்? இரண்டாம் ஷா ஆலம்
- பானிபட் போருக்கு பிறகு தில்லியின் மன்னராக யாரை அகமது ஷா அப்தாலி அங்கீகரித்தார்? இரண்டாம் ஷா ஆலம்
- முதலாம் மாதவ் ராவின் காலகட்டம் என்ன? 1761 & 1772
- முதலாம் மாதவ் ராவிற்கு பிறகு பேஷ்வாவாக பொறுப்பை ஏற்றவர் யார்? நாராயணராவ்
- கடைசி பேஷ்வாவாக இருந்தவர் யார்??’ இரண்டாம் பாஜிராவ்
- முதலாம் ஆங்கிலேய மராத்திய போரின் காலகட்டம் என்ன? 1775 & 1782
- முதலாவது ஆங்கிலேய மராத்திய போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? சால்பை உடன்படிக்கை
- சால்பை உடன்படிக்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1782
- இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போரின் காலகட்டம் என்ன ? 1803-1806
- பேசின் ஒப்பந்தம் எப்போது கையெழுத்திடப்பட்டது? 1802
- மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரின் காலகட்டம் என்ன? 1817- 1819
- பூனா அரசு குடியிருப்பை தீயிட்டுக் கொளுத்தியவர் யார்? இரண்டாம் பாஜிராவ்
- இரண்டாம் பாஜிராவிடமிருந்து பூனா அரச குடியிருப்பை கைப்பற்றியவர் யார்? ஜெனரல் ஸ்மித்
- எந்த ஆண்டு பாஜிராவ் எல்பின்ஸ்டனிடம் சரணடைந்தார்? 1818
- எந்த ஆண்டு இரண்டாம் பாஜி ராவ் மரணமடைந்தார்? 1851
- மராத்திய நிர்வாகத்தின் மையம் மற்றும் பேஷ்வா தலைமைச் செயலகம் எங்கு இருந்தது? பூனா
- பேஷ்வாக்களின் கீழ் இருந்த பெரிய மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சர்சுபாஷ்தார்கள்
- மாகாணங்களின் கீழிருந்த மண்டலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சுபாக்கள் மற்றும் பிராந்துகள்
- மாவட்டங்களில் பேஷ்வாக்களின் பிரதிநிதிகளாக விளங்கிய அதிகாரிகள் யார்? மம்லத்தார் மற்றும் காமாவிஸ்தார்
- மாவட்ட அளவில் கணக்குகளை கவனித்துக் கொண்ட அதிகாரிகள் யார்? தேஷ்முக், தேஷ்பாண்டே
- மம்லத்தார் மற்றும் காமாவிஸ்தார் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரிகளாக விளங்கியவர்கள் யார்? தேஷ்முக், தேஷ்பாண்டே
- பொதுப் பணம் தவறாக கையாளப்படுவது தடுக்கும் வகையில் மராத்திய அரசு முன்பணமாக வசூலித்த தொகையில் பெயர் என்ன? ரசத்
- எழுத்தர்களுக்கும் இதர அடிநிலை ஊழியர்களுக்கும் ஆண்டில் எத்தனை மாதம் ஊதியம் வழங்கப்பட்டது? 10 அல்லது 11 மாதம்
- தலைமை கிராம அதிகாரியாக விளங்கியவர் யார்? பட்டேல்
- பட்டேலுக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் யார்? குல்கர்ணி அல்லது கணக்காளர் மற்றும் ஆவண காப்பாளர்
- கட்டாய வேலை எவ்வாறு அழைக்கப்பட்டது? பேகர்
- நகரங்களிலும் மாநகரங்களிலும் தலைமை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? கொத்வால்
- சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது சிவில் வழக்குகளை தீர்த்து வைப்பது மாதாந்திர கணக்குகளை அரசுக்கு அனுப்புவது ஆகிய பணிகளை மேற்கொண்டு அதிகாரியார்? கொத்வால்
- மராத்தியர் காலத்தில் நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டது? மூன்று பயிர்வகைகள், நீர்ப்பாசன வசதிகள், நிலத்தின் உற்பத்தித் திறன் ஆகியவற்றின் அடிப்படையில்
- செளத் என்ற வரியில் ஆட்சியாளருக்கு எத்தனை சதவீதம் வருவாய் பிரிக்கப்பட்டு இருந்தது? 25%
- செளத்என்ற வரியில் மராத்திய அதிகாரிகள் மற்றும் படைகளை பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு எத்தனை சதவீதம் வரி ஒதுக்கப்பட்டிருந்தது? 66%
- செளத் என்ற வரியில் பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சீவிற்கு எத்தனை சதவீதம் வரி ஒதுக்கப்பட்டிருந்தது? 6%
- செளத் என்ற வரியில் வரிவசூல் செய்வோருக்கு எத்தனை சதவீதம் வரி ஒதுக்கப்பட்டிருந்தது? 3%
- அனைத்து தனியார் நாணய தொழிற்சாலைகளும் எப்போது மூடப்பட்டு, ஒரே ஒரு மத்திய நாணய தொழிற்சாலை உருவாக்கப்பட்டது? 1760
- வரி செலுத்துபவரின் ஒருவருட வருமானத்துக்கு சமமான வரியாக என்ன வரி வசூலிக்கப்பட்டது? குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி
- மராத்தியர் காலத்தில் பணப் பத்திரங்களின் மீது எத்தனை சதவீத கட்டணம் வசூலிக்கப்பட்டது?’ 25%
- ஒவ்வொரு கிராமத்திலும் காவலர்களாக பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் பெயர் என்ன? மகர்கள்
- குற்றவாளிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்காக கூடுதலாக காவல்துறை அதிகாரிகளை நியமனம் செய்தவர் யார்? இரண்டாம் பாஜி ராவ
- நகரப்பகுதிகளில் எந்த அதிகாரிக்கு நீதி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன? கொத்வால்
- பேஷ்வாக்களின் கீழ் ராணுவ அமைப்பு எந்த ராணுவ அமைப்பை போன்று அமைக்கப்பட்டிருந்தது? முகலாய ராணுவ அமைப்பு
- கொங்கணம்,கண்டேரி,விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படை தளங்களை கட்டியவர் யார்? பாலாஜி விஸ்வநாத்
- நயங்கரா அமைப்பு முறையை உருவாக்கியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
- தமிழகம் எத்தனை மற்றும் என்னென்ன நயங்காராக்களாப் பிரிக்கப்பட்டிருந்தது? 3 மதுரை, செஞ்சி 7 தஞ்சாவூர்
- மராத்திய அரசர் ராஜாராம் முகலாயப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக எங்கு அடைக்கலம் புகுந்தார்? செஞ்சி
- யாருடைய தலைமையில் முகலாய படைகள் கைப்பற்றின? தளபதி சுல்பிகர்கான், பின்னர் தாவுத் கான்
- கிலாதார் என்பது என்ன பதவி? கோட்டை ராணுவத்தின் தலைவர்
- செஞ்சிக் கோட்டையின் கிலாதாராக நியமிக்கப்பட்டு இருந்தவர் யார்? பண்டேலா ராஜபுத்திர தலைவர் சுவரூப் சிங்
- சுவரூப் சிங்எப்போது செஞ்சிக்கோட்டையின் கிலாதாராக பணியமர்த்தப்பட்டார்? 1700
- சுவரூப் சிங் எப்போது மரணம் அடைந்தார்? 1714
- சுவரூப் சிங் மரணத்துக்குப் பிறகு செஞ்சியின் ஆளுநராகப் பொறுப்பேற்றவர் யார்? தேஜ் சிங் அல்லது தேசிங்கு
- தஞ்சாவூரில் நாயக்க ஆட்சி எப்போது முடிவு பெற்றது? 1673
- மராத்தியர் ஆட்சி தஞ்சாவூரில் யாரால் எப்போது தொடங்கப்பட்டது? 1676 மராத்திய தளபதி வெங்கோஜி
- 1677 சிவாஜி வெங்கோஜியை அகற்றிவிட்டு யாரை தஞ்சாவூரின் அரசனாக அறிவித்தார்? சந்தாஜி
- வெங்கோஜி மீண்டும் தஞ்சாவூரை கைப்பற்றி மரணமடைந்த பிறகு அரசராக பொறுப்பேற்றவர் யார்? வெங்கோஜி மகன் சாஜி
- ஷாஜிக்கு பிறகு அரசராகப் பதவி ஏற்றவர் யார்? ஷாஜி சகோதரர் முதலாம் சரபோஜி
- முதலாம் சரபோஜி தஞ்சாவூரின் அரசராக இருந்த காலகட்டம் என்ன? 1712 முதல் 1728 வரை, 16 ஆண்டுகள்
- முதலாம் சரபோஜி க்கு பின்னர் அரியணை ஏறியவர் யார்? துக்கோஜி
- துக்கோஜியைத் தொடர்ந்து 1739 முதல் 1763 வரை ஆட்சி புரிந்தவர்? பிரதாப்சிங்
- பிரதாப் சிங்கின் மகன் துல்ஜாஜி எப்போது ஆட்சியில் அமர்ந்தார்? 1787
- தஞ்சாவூரை ஆண்ட மராத்திய போன்ஸ்லே சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ஆட்சியாளர் யார்? இரண்டாம் சரபோஜி
- இரண்டாம் சரபோஜி யார் மூலம் கல்வி பயின்றார்? ஜெர்மானிய சமயப் பரப்பு குழுவை சேர்ந்த அப்ரட்ரிக் ஸ்வார்ட்ஸ்
- மேற்கத்திய அறிவியல் மற்றும் மருத்துவத்தை கையாளும் மருத்துவராக இருந்த மராத்திய மன்னர்? இரண்டாம் சரபோஜி
- முதலாவது மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்குத் அச்சகம் நிறுவியவர் யார்? இரண்டாம் சரபோஜி
- சரஸ்வதி மஹால் நூலகம் யாரால் கட்டப்பட்டது? நாயக்க மன்னர்களால்
- சரஸ்வதி மஹால் நூலகம் யாரால் செறிவூட்டப்பட்டது? இரண்டாம் சரபோஜி
- மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் என்ன எழுத்து வடிவில் எழுதப்பட்டன? மோடி எழுத்து வடிவம்
- இரண்டாம் சரபோஜி யாரை கல்வித்துறையின் முன்னோடியாக கருதினார்? தரங்கம்பாடி சமயப் பரப்பு குழுவைச் சேர்ந்த அறிஞர் சி எஸ் ஜான்
- மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளி முறையை அறிமுகம் செய்தவர் யார்? சி எஸ் ஜான்
- 1820 ஆம் ஆண்டு தொடக்க பொதுப் பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தை யோசனையாக கூறிய சென்னை ஆளுநர் யார்? தாமஸ் மன்றோ
- தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என 1812 லையே கேட்டுக் கொண்டவர் யார்? சி.எஸ் ஜான்
- தஞ்சாவூரில் கிறிஸ்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீன பொதுப் பள்ளிகளை நிறுவியவர் யார்? இரண்டாம் சரபோஜி
- எந்த ஆண்டு இரண்டாம் சரபோஜி முதலாவது நவீன பொதுப் பள்ளிகளை நிறுவினார்? 1803
- ஆளுநர் மன்றோவின் கல்வி கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட 1823 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி தஞ்சாவூர் முழுவதும் எத்தனை பள்ளிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது? 44 பள்ளிகள்
- தாமஸ் மன்றோவின் அறிக்கையின்படி எத்தனை இலவச பள்ளிகள் தஞ்சாவூர் முழுவதும் நடத்தப்பட்டன? 21
- புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக என்ன முறையை அரசவை நடத்திய பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது? நவவித்யா
- முக்தாம்பாள் சத்திரம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1803
- இரண்டாம் சரபோஜி மன்னரின் விருப்பமான அன்னசத்திரம் எது? முக்தாம்பாள் சத்திரம்
- மதப் பரப்பாளர்கள் எங்கு ஏழை கிறுத்துவ மாணவர்களுக்கான பள்ளியை நடத்தினர்? கண்ணந்தங்குடி
- மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மூலிகை மருந்துகளை தயாரித்த எந்த ஆராய்ச்சி நிறுவனத்தை இரண்டாம் சரபோஜி நிறுவினார்? தன்வந்திரி மஹால்
- யாருடைய காலத்தில் நோயாளிகளின் ஆவணங்களை பராமரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது? இரண்டாம் சரபோஜி
- எத்தனை தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தை சரபோஜி மன்னர் உருவாக்கினார்? 18 தொகுதிகள்
- இரண்டாம் சரபோஜி எழுதிய நூல்கள் என்னென்ன? குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ரராக்சஸ்யா
- இரண்டாம் சரபோஜி கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக் கருவிகளில் எதனை அறிமுகம் செய்தார்? வயலின், கிளாரினட்
- தமிழ் நாட்டின் முதலாவது வன உயிரியல் பூங்காவை அமைத்தவர் யார்? இரண்டாம் சரபோஜி
- தமிழ் நாட்டின் முதலாவது வன உயிரியல் பூங்கா எங்கு அமைக்கப்பட்டது? தஞ்சாவூர் அரண்மனை வளாகம்
- இரண்டாம் சரபோஜி மன்னர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்? 40 ஆண்டுகள்
- இரண்டாம் சரபோஜி மன்னர் மரணம் அடைந்த ஆண்டு? மார்ச் 7 1832
- “முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரச தன்மையோடு அலங்கரித்து இல்லை” என இரண்டாம் சரபோஜி பற்றி கூறியவர் யார்? அருட்தந்தை பிஷப் ஹீபர்
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 200+ மராத்தியர்கள் பற்றிய முக்கிய வினா விடைகள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!