TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: 2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். மற்ற ரெகுலேசனுக்கான தேர்வுகள் 21ம் தேதி துவங்குகிறது. கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம்.
ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை. மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒருசில பல்கலையில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மற்ற பல்கலை.,யிலும் ஜூலைக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நீட் தேர்வு கூடாது என்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


