அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் ஆக.9 தொடங்கி வைத்தார்
இந்த நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக ரூ.1000/- மாதாமாதம் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பாட நூல்கள், பொது அறிவுப் புத்தகங்கள் வாங்குவதற்கு உதவும். இளைஞர்களின் திறன்கள் மேம்படுத்தப்படுத்தப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற. வருமான உச்ச வரம்பை பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி வகுப்புகளில் பயிலும் ஆண் மாணவர்கள்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களும் பயன் பெறலாம். மாதாந்திர ஊக்கத்தொகை DBT Portal மூலம் வரவு வைக்கப்படும்.
6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 6 முதல் 8ம் வகுப்பு வரை RTE ல் பயின்று பின் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன் பெறலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
மாணவர்களின் கட்டாய ஆவணங்கள்: ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் Seeding செய்யப்பட்ட வங்கிக் கணக்கு எண், EMIS Number, UMIS Number, இந்த கட்டாய ஆவணங்களுடன் மாணவர்கள் அந்தந்த உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

