TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு
மாதந்தோறும்
ஆயிரம்
ரூபாய்
– விண்ணப்பிப்பது
எப்படி…?
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்
சமீபத்தில்
வெளியிட்ட
செய்தி
குறிப்பில்
கூறியிருப்பதாவது,
புதுமை
பெண்
திட்டத்தின்
கீழ்
மாணவிகளுக்கு
மாதந்தோறும்
ஆயிரம்
ரூபாய்
வழங்கப்படுகிறது.
இதுவரை 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகையை பெற்று பயனடைந்தனர். தற்போது www.puthumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளும் சம்பந்தப்பட்ட
கல்வி
நிறுவனங்கள்
வாயிலாக
நவம்பர்
1ம்
தேதி
முதல்
11ம்
தேதி
வரை
கல்வி
நிறுவனங்களில்
நடைபெறும்
முகாம்களில்
விவரத்தை
தெரிந்து
கொண்டு
இந்த
திட்டத்தில்
சேர
விண்ணப்பிக்கலாம்.
மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும்.
நேரடியாக
விண்ணப்பிக்க
கூடாது.
மேலும்
2, 3 மற்றும்
4ம்
ஆண்டுகளில்
இந்த
திட்டத்தில்
சேராத
மாணவிகளும்
கல்வி
நிறுவனங்கள்
மூலமாக
நவம்பர்
11ம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாணவிகளுக்கு
சந்தேகம்
இருந்தால்
சமூக
நல
இயக்குனராக
அலுவலகத்தில்
மாநில
அளவில்
செயல்படும்
உதவி
மையத்தின்
9150056809,
9150056801, 9150056810 எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.