Home Blog 100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை!

100 Degree Courses அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை!

0

100 Degree Courses அரசு
வேலைக்கு தகுதி இல்லாதவை

100 பட்டப் படிப்புகள் இணையானவை  இல்லை : அரசாணை வெளியீடு

அரசுப் பணியில்
சேர்க்கப்படுவோரின் பட்டப்
படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில்
100
பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு
ஆணையிட்டுள்ளது. அரசுப்
பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள்
கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும்
கல்வி நிறுவனங்கள் வழங்கும்
50
க்கும் மேற்பட்ட பட்டங்கள்,
அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியானவை அல்ல என்று தமிழக
அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசுப்
பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட
தேர்வுகளில் பங்கேற்போர் அரசுப்
பணிக்கு தகுதியானர்களா என்று
நிர்ணயம் செய்வதில் அவர்கள்
படித்துள்ள பட்டப் படிப்புகள் ஏற்புடையதா என்று தேர்வுக்
குழுவினர் தெரிந்து கொள்ள
வசதியாக எந்தெந்த படிப்புகள் எதற்கு இணையானவை(Equivalence) அல்லது
இணை இல்லாதவை(Non-Equivalence) என்று
முடிவு செய்வதற்காக கடந்த
பிப்ரவரி மாதம் 11ம்
தேதி 60வது இணைக்குழு
கூட்டம்(Equivalence Committee Meeting) நடந்தது.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர்,
இணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி, பல்கலைக்
கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பட்டப்
படிப்புகள், இணையானவை, இணை
இல்லாவை என 100 படிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியல்
அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது தொடர்பாக அரசாணை
வழங்க வேண்டும் என்று
கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு
அரசப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், இணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அனுப்பிய
பட்டில்களை அரசு கவனமுடன்
பரிசீலித்து, அந்த பட்டிலுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை(
எண் 66, 24.4.19) பிறப்பித்துள்ளது.

அந்த ஆணை
அனைத்து பல்கலைக் கழகம்,
கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது. தற்போது
பள்ளிக் கல்வித்துறைக்கும் இந்த
பட்டியல் தொடர்பான அரசாணை
வந்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை மற்றும்
இணையில்லா படிப்புகள் ஆசிரியர்
பணி நியமனத்தின் போதும்
பரிசீலிக்கப்பட உள்ளது.

தொடர்பாக தமிழக
அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும்
பி.சி.
பட்டப் படிப்பானது பி.எஸ்.சி
கணித படிப்பிற்கு நிகரல்ல
என குறிப்பிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் ஆகியவை
அளிக்கும் எம்.எஸ்.சி
அப்ளையிடு சயின்ஸ் நுண்ணுயிரியல் காமராஜர் பல்கலைகழகம் அளிக்கும்
எம்.எஸ்.சி
நுண்ணுயிரியல் முதுகலை
படிப்புகள், எம்.எஸ்.சி
விலங்கியல் முதுகலைபடிப்பிற்கு நிகராகாது
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி
நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும்
மேற்பட்ட இளநிலை மற்றும்
முதுகலை பட்டப்படிப்புகளை அரசு
வேலை வாய்ப்பிற்கு தகுதியாக
கருதப்படும் படிப்புகளை கருத
முடியாதென அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த
ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என தமிழக அரசு
அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அரசாணை (எண்
66-24/0419)
பதிவிறக்கம் செய்ய இங்கே
கிளிக் செய்யவும்




NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version