11 வகையான ஆவணங்களை
பயன்படுத்தி வாக்களிக்கலாம்
வாக்குப்பதிவின்போது 11 வகையான ஆவணங்களை
பயன்படுத்தி வாக்களிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற
உள்ளாட்சி தேர்தலுக்கான ‘பூத்
சிலிப்‘ வினியோகம் நடைபெற்று
வருகிறது. ‘பூத் சிலிப்‘
பில் வாக்காளர் போட்டோ
இல்லாமல், பெயர், முழு
முகவரி, பாகம் எண்,
வரிசை எண் உள்ளிட்ட
விவரங்களும் அச்சிடப்பட்டுள்ளது.
‘பூத்
சிலிப்‘ பின்புறம் வருகிற
19ம் தேதி வாக்குச்சாவடிக்கு செல்லும்போது வாக்களிக்க பயன்படுத்தும் 11 வகையான
ஆவணங்கள் விவரம் அச்சிடப்பட்டுள்ளது. ‘பூத் சிலிப்‘
இருந்தால் மட்டும் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள
அட்டையை கட்டாயம் எடுத்து
செல்ல வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்
அடையாள அட்டை இல்லாத
வாக்காளர் பிற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம். ஆதார்
அட்டை, தேசிய வேலை
உறுதி திட்ட அட்டை,
வங்கி அல்லது அஞ்சலக
கணக்கு புத்தகம், மருத்துவ
காப்பீட்டு அட்டை, டிரைவிங்
லைசென்ஸ், ‘பான் கார்டு‘,
மக்கள்தொகை பதிவு அதிகாரி
வழங்கிய, ‘ஸ்மார்ட் கார்டு,
‘பாஸ் போர்ட்‘, போட்டோவுடன் கூடிய பென்சன் ஆவணம்,
மத்திய, மாநில அரசுகள்
வரையறுக்கப்பட்ட பொது
நிறுவனங்கள் வழங்கிய அடையாள
அட்டைகள், பாராளுமன்ற, சட்டசபை
உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.