TAMIL MIXER EDUCATION- ன் வேலைவாய்ப்பு செய்திகள்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்வது
எப்படி?? சம்பளம் எவ்வளவு??
மத்திய
அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள முப்படைகளில் தற்காலிக
அடிப்படையில் இளைஞர்களைச் சேர்க்கும் ‘அக்னிபாத்‘ திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? சம்பளம் எவ்வளவு??
என்பதைப்
பார்க்கலாம்
ராணுவத்தில் அதிகளவு இளைஞர்கள் சேர
வழிவகுக்கும் திட்டமே
அக்னிபாத். இத்திட்டத்தின் கீழ்
தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். அக்னிபாதை
திட்டத்தில் இணையும் இளைஞர்கள்
தற்காலிக அடிப்படையில் 4 ஆண்டுகள்
மட்டுமே பணியில் இருப்பர்.
அக்னி வீரர்களுக்கு முதல்
6 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.. அதன்பின்னர் 3.5 ஆண்டுகள் பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்த அக்னிபாதை திட்டத்தில் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை
நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துறை: பாதுகாப்புத் துறை
பணிக் காலம்: 4 ஆண்டுகள்
( 6 மாதம் பயிற்சி, 3.5 ஆண்டுகள்
பணி )
வேலையின் பெயர்: சிப்பாய்
ஜெனரல் டியூட்டி , சிப்பாய்
டெக்னிக்கல் , சிப்பாய் கிளார்க்
/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர்,
சிப்பாய் டிரேட்ஸ்மேன்.
கல்வித் தகுதி:
1. சிப்பாய்
ஜெனரல் டியூட்டி – 45% மதிப்பெண்களுடன் எஸ்எஸ்எல்சி/மெட்ரிக் அதிக
தகுதி இருந்தால் சதவீதம்
தேவையில்லை.
2. சிப்பாய்
டெக்னிக்கல் – இயற்பியல், வேதியியல்,
கணிதம் மற்றும் ஆங்கிலத்துடன் அறிவியலில் 10+2/இடைநிலைத் தேர்வில்
தேர்ச்சி.
3. சிப்பாய்
கிளார்க் / ஸ்டோர் கீப்பர்
டெக்னிக்கல் – 10+2/இடைநிலைத் தேர்வில்
ஏதேனும் ஒரு பாடத்தில்
(கலை, வணிகம், அறிவியல்)
மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
4. சிப்பாய்
நர்சிங் உதவியாளர் – 10, +2 இடைநிலைத்
தேர்வில் இயற்பியல், வேதியியல்,
உயிரியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
5. சிப்பாய்
டிரேட்ஸ்மேன்
வயது வரம்பு: 17.5 – 23 வயது
சம்பளம்: ரூ. 30,000-ரூ.
40,000
சம்பளம்:
முதல்
ஆண்டு: 21,000
2வது
ஆண்டு: 23,100
3வது
ஆண்டு: 25,580
4வது
ஆண்டு: 28,000
அதாவது,
முதலாம் ஆண்டில் மாதாந்திர
ஊதியமாக ரூ. 30 ஆயிரம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்னி
வீரர் தொகுப்பு நிதிக்கு
ரூபாய் 9,000 அளிக்கப்படும். எஞ்சிய
ரூ. 21,000 மட்டுமே
கையில் வழங்கப்படும். இதேபோல்
2வது ஆண்டில் ரூ.
33,000, 3ம் ஆண்டில் ரூ.
36,500, 4ம் ஆண்டில் ரூ.
40,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில்
30 சதவீதம் பங்களிப்பு தொகையாக
பிடிக்கப்படும்.
எஞ்சிய
70% தொகை மட்டுமே வழங்கப்படும். பின்னர்4 ஆண்டுகள் நிறைவடைந்ததும், தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ. 5.02 லட்சம் மற்றும்
அதற்கு அரசு அளிக்கும்
தொகைக்கான வட்டியுடன் சேர்த்து
சேவா நிதியாக ரூ.
11. 70 லட்சம் அக்னி வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த
சேவா நிதிக்கு வருமான
வரியில் இருந்து விலக்கு
அளிக்கப்படும். ஆனால்
பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய
பலன்கள் அளிக்கப்படாது.
ஆனால்
அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள்காப்பீடு ரூ.
48 லட்சத்திற்கு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக
ரூ.44 லட்சம் நிதியுதவியும், பணியின்போது காயமடைந்து 100 % மாற்றுத்
திறனாளியானால் ரூ.44
லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25
லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15
லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அதேபோல் அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு கடன்
வசதிகளும், அடுத்த பணிக்கு
செல்வதற்கு ஏதுவாக திறன்
சான்று, உயர் கல்வியில்
சேருவதற்காக கல்விச் சான்று
வழங்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது,
ஆட்கள் தேர்வு:
ஆயுதப்படைகள் உள்பட பல்வேறு வளாகங்களில் ஆள்சேர்ப்பு பேரணிகள் மற்றும்
சிறப்பு முகாம்களை நடத்தி,
ஆன்லைன் மூலம் பதிவு
செய்யப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. அதாவது,
தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய திறன்
தகுதிகள் கட்டமைப்பு போன்ற
அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு
முகாம்கள் மற்றும் வளாக
நேர்காணல்கள் நடத்தப்படும். 90 நாட்களில் ஆன்லைன் மூலம்
முறையில் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய காலியிடங்கள் மற்றும்
விண்ணப்பிக்கும் செயல்முறை
ஆகியவை அந்தந்த ஆயுதப்படை
இணையதளங்களில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு: https://joinindianarmy.nic.in/Authentication.aspx,
https://www.joinindiannavy.gov.in/,
https://careerindianairforce.cdac.in/
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


