தேசிய திறனறி
தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
தேசிய
திறனறி தேர்வில் பங்கேற்க
விரும்பும் பள்ளி மாணவர்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என
பள்ளி கல்வித்துறை இணை
இயக்குனர் தெரிவித்துள்ளார்.
செய்திக்குறிப்பு:
புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் அனைத்து
பள்ளிகளிலும் தற்போது
10ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு, தேசிய
திறனறி முதல் நிலை
தேர்வு, அடுத்தாண்டு ஜனவரி
23ம் தேதி நடைபெற
உள்ளது.
இதில்
முதல் 20 இடங்களை பிடிக்கும் மாணவர்கள், இரண்டாம் நிலைத்
தேர்வில் பங்கேற்க தகுதி
பெறுவர் இத்தேர்வில் வெற்றி
பெறும் மாணவர்கள் பிளஸ்
1 வகுப்பில் இருந்து முனைவர்
பட்டம் பெறும் வரை
மத்திய அரசு உதவித்
தொகை வழங்கும்.
முதல்நிலை,
இரண்டாம் நிலை தேர்வில்
தேர்வு பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக முறையே
தலா 5 ஆயிரம் ரூபாய்,
10 ஆயிரம் ரூபாய் புதுச்சேரி அரசால் ஒருமுறை வழங்கப்படும்.
இத்தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் தங்கள்
பள்ளி மூலம் www.nmmsntspdy.com என்ற இணையதளத்தில், அடுத்த மாதம் 12ம்
தேதி வரை விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம்.