அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை
தரமணியில் அமைந்துள்ள அரசு
எம்ஜிஆர் திரைப்படம் மற்றும்
தொலைக்காட்சி பயிற்சி
கல்லூரியில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியேட், இயக்கம்
மற்றும் திரைக்கதை எழுதுதல்,
எடிட்டிங், அனிமேஷன் மற்றும்
விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய
4 ஆண்டு கால இளங்கலை
பட்டப்படிப்புகள் (Bachelor of
Visual Arts-BFA) வழங்கப்படுகின்றன.
இவை,
கலை ஆர்வமிக்க மாணவ,
மாணவிகளுக்கு ஏற்ற
படிப்புகள் ஆகும். இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில்
(2021-2022) சேர மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதற்கான
விண்ணப்பத்தை தமிழக
அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தபால் மூலமாகவும் பெறலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண் ணப்பத்தை
தேவையான ஆவணங்களுடன், ‘முதல்வர்,
தமிழ்நாடு அரசு எம்ஜிஆர்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சிஐடி
வளாகம், தரமணி, சென்னை
600 113’ என்ற முகவரிக்கு செப்டம்பர் 9-ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பங்கள் வாங்க மாணவர்கள் நேரில்
வர வேண்டாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


