ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
டேராடூன்
ராணுவ கல்லுாரியில் எட்டாம்
வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள
இந்திய தேசிய ராணுவ
கல்லுாரியில் எட்டாம்
வகுப்பில் சேர்ந்து படிக்க
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான நுழைவு
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் 02.01.2010க்கு
முன்னரும், 01.07.2011க்கு
பின்னரும் பிறந்திருக்கக் கூடாது.
மாணவர்கள் இக்கல்லுாரியில் சேரும்
போது ஏழாம் வகுப்பு
படிப்பவராகவோ அல்லது
தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க
வேண்டும்.புதுச்சேரி மாநில
மாணவ, மாணவிகளுக்கு எழுத்துத்
தேர்வு, ஏப்., 4ம்
தேதி புதுச்சேரி, அண்ணா
நகர், காமராஜர் நுாற்றாண்டு கல்வித் துறை வளாகத்தில் நடக்கிறது.
காலை
9:30 மணி முதல் 11.00 வரை
கணிதத் தேர்வு, மதியம்
12.௦௦ மணி முதல்
1.௦௦ வரை பொது
அறிவுத் தேர்வு, பிற்பகல்
2;30 மணி முதல் மாலை
4:30 வரை ஆங்கில தேர்வு
நடைபெறும்.விண்ணப்பங்களை www.rimc.gov.in என்ற
வலைதளத்தில் பொதுப்பிரிவினர் ரூ.600,
அட்டவணை இனத்தவர் மற்றும்
பழங்குடியினர் அதற்கான
சாதி சான்றிதழுடன் ரூ.555
செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பணம் செலுத்தியதற்கான ரசீது
மற்றும் முகவரியை குறிப்பிட்டு விரைவு தபால் மூலம்,
&’தி ராஷ்ட்ரிய இந்தியன்
மிலிட்ரி காலேஜ், கர்கி
கண்டோன்மென்ட், டேராடூன்,
உத்தராகண்ட்
–
248 003 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்கள், 25.04.2022ம்
தேதிக்குள், இணை இயக்குனர்
தேர்வு பிரிவு, நான்காம்
தளம், காமராஜர் நுாற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா
நகர், புதுச்சேரி-605 005 என்ற
முகவரிக்கு வந்து சே ரவேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

