HomeBlogதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு
கடை வைக்க ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்

தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு வேலூர்
மாவட்டத்தில் பட்டாசு
கடை வைக்க விரும்புவோர்ஆன்லைன்மூலம் இம்மாதம்
இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தீபாவளி
பண்டிகையை முன்னிட்டு வேலூர்
மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெறஆன்லைன்
மூலம் விண்ணப்பிக் கலாம்.
இம்மாதம் 30-ம் தேதிக்
குள் சேவை
மையங்கள் மூலம் ஆன்லைன்
வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது, கடை அமைய
உள்ள இடத்துக்கான சாலை
வசதி, கடையின் கொள்ளளவு,
சுற்றுப்புறங்களை குறிப்பிடும் வரைபடம், கட்டிடத்துக்கான புளுப்பிரிண்ட் வரைபடம் ஆகியவற்றின் 6 நகல்கள்,
தற்காலிக பட்டாசு அமைக்க
உள்ள இடம் சொந்த
இடமாக இருந்தால் அதற்கான
ஆவணங்கள் அல்லது வாடகை
கட்டிடமாக இருந்தால் வாடகை
ஒப்பந்த பத்திரம், உரிமத்துக்கான ஆவணம், உரிமம் கட்டணம்
ரூ.500 செலுத்தியதற்கான அசல்
ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மேலும்,
இருப்பிடங்களுக்கான ஆதாரம்
காட்டும்போது ஆதார்
அட்டை, வாக்காளர் அடையாள
அட்டை, ரேஷன் கார்டு,
வரி ரசீது, 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்
திருக்க வேண்டும். ஆன்லைன்
மூலம் பெறப்படும் விண்ணப்
பங்கள் சம்மந்தப்பட்ட துறைகள்
மூலம் ஆய்வு செய்யப்படும். அதன் பிறகே விண்ணப்பங்கள் ஏற்பதும், நிராகரிப்பதும் முடிவு
செய்யப்பட்டு அதன்
விவரங்கள் ஆன்லைன் மூலமாக
விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால் தற்காலிக
கடை உரிமத்தின் ஆணையை
தீபாவளி பண்டிகைக்கு ஒரு
மாதத்துக்கு முன்பாக சேவை
மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வரும்
30-
ம் தேதி கடைசி
நாள் என்பதால் அதற்குப்
பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்
பங்கள் ஏற்கப்படாது.

அதேநேரத்தில், நிரந்தர பட்டாசு விற்பனை
உரிமம் கேட்பவர்கள் ஆண்டு
தோறும் அதற்கான உரிமத்தை
புதுப்பித்தலுக்கு மேற்கூறிய
வழிமுறைகள் பொருந்தாதது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular