TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி செய்திகள்
வேளாண் பல்கலையில் B.Sc., Agri படிப்புக்கு ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்
கோவை
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்புக்கல்லுாரிகள், 28 இணைப்புக்
கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில்,
B.Sc., Agri படிப்பின் கீழ்,
12 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில், பல்கலை
உறுப்பு கல்லூரிகளில், 2,148, இணைப்பு
கல்லூரிகளில், 2,337 என,
மொத்தம், 4,485 இடங்கள் உள்ளன.
வரும், 2022 – 2023ம்
கல்வியாண்டுக்கான மாணவர்
சேர்க்கை நடைமுறைகளை பல்கலை
நிர்வாகம் துவங்கியுள்ளது.
வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
ஜூலை,
27 வரை மாணவர்கள் https://tnau.ucanapply.com என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை
தொடர்பான பதிவு செய்தல்,
விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை
பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு
போன்ற அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.
முன்னாள்
படைவீரர்கள், விளையாட்டு வீரர்கள்,
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட
பல்வேறு இடஒதுக்கீட்டுக்கு, 971 இடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே
விண்ணப்பத்தில் அனைத்து
பாடப்பிரிவுக்கும் விண்ணப்பிக்க முடியும். ஒருவர் ஒவ்வொரு
பாட பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை.
தமிழ்,
ஆங்கில வழியில் வேளாண்,
தோட்டக்கலை பாடபிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்களின் நலனுக்காக,
NEET தேர்வு முடிவுகள் வெளியான
பின், வேளாண் படிப்புகளுக்கான சேர்க்கை துவங்கும். September மாதத்தில் வகுப்புகள் துவங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


