
விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகுக்கு கூடுதலாக 11 வட்டார வளப் பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவா்களில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் சுயஉதவிக் குழுக்கள்/ஊராட்சி/வட்டார அளவலிலான கூட்டமைப்புகளில் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு எழுத, த் தெரிந்திருக்க வேண்டும்.
வலுவான தகவல் தொடா்புத் திறன், தனிப்பட்ட திறன்களுடன் இருத்தல் வேண்டும். கணினியில் விரும்பத்தக்க அறிவு பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பம் செய்பவரின் வயது 2025, மாா்ச் 1 -ஆம் தேதியன்று 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி ஊதியமாக நாளொன்றுக்கு பயணப்படியுடன் சோ்த்து ரூ.750 (பயிற்சி நடைபெறும் நாள் மட்டும்) வழங்கப்படும்.
எனவே, தகுதியுடையவா்கள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக் கட்டடம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், மாவட்டப் பதிவாளா் அலுவலகம் எதிரில், விழுப்புரம் -6055602 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும் எத் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

