காந்திகிராம பல்கலையில் இளங்கலை பட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய
நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி
கணிதம், இயற்பியல், வேதியியல்,
வீட்டு அறிவியல், ஜவுளி
மற்றும் பேஷன் வடிவமைப்பு, புவியியல், நுண்ணறிவியல், கணினி
அறிவியல், வேளாண்மை உட்பட
16 இளங்கலை படிப்புகளுக்கு 13 மொழிகளில்
பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 2022-2023ம்
கல்வி ஆண்டுக்கான இளங்கலை
மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை
தேசிய தேர்வு முகமை
நடத்துகிறது. இத்துடன் முதுகலை
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவு
தேர்வு நடத்தப்பட உள்ளது.
13 மொழிகளில்
கணினி அடிப்படையில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது. அதிகபட்சமாக ஏதேனும் 3 மொழிகளை தேர்வு
செய்து மொழித்திறன் மற்றும்
வாசிப்பு புரிதல் மூலம்
தேர்வு நடக்கும்.
27 வகை
முதன்மை பாடப்பிரிவுகளில் ஒரு
மாணவர் அதிகபட்சமாக 6 பாடங்களை
தேர்வு செய்யலாம். தேசிய
கல்வி ஆராய்ச்சி, பயிற்சி
குழுமத்தின் பிளஸ் டூ
பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள்
அமையும். படிப்புகள், பாடத்தேர்வுகள் விபரங்களை பல்கலைக்கழக இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். மே
6ம் தேதி வரை
இணையவழியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல்
விபரங்களை பெற 9442534542
என்ற எண்ணில் காலை
9மணி முதல் மாலை
5 மணி வரை தொடர்பு
கொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.