HomeBlogஅரசு வழங்கும் 100% மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

அரசு வழங்கும் 100% மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

அரசு வழங்கும்
100%
மானியத்தில் ஆடு வழங்கும்
திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக
அரசின் 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என
தருமபுரி மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்:

2021-2022ஆம் ஆண்டு
ஏழ்மையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவித மானியத்தில் 5 வெள்ளாடுகள்/ செம்மறியாடுகள் வழங்கி
பெண்களை தொழில் முனைவோராக,
உருவாக்கும் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி
ஒன்றியங்களில் ஓர் ஊராட்சி
ஒன்றியத்திற்கு 100 பயணாளிகள் வீதம் 1000 பயனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

இத்திட்டத்தில் பயன்பெற ஏழ்மை நிலையில்
உள்ள விதவைகள் கணவரால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவார்கள்.

திட்டத்தின் கீழ் பயண்பெறும் பயனாளிகள் நிலமற்ற
வேளாண் தொழிலாளியாக இருக்க
வேண்டும்.

பயனாளி
அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

பயனாளி
60
வயதிற்கு கீழ் உள்ளவராக
இருக்க வேண்டும்.

பயனாளி
சொந்தமாக கறவை பசுக்கள்
வெள்ளாடுகள் செம்மறி ஆடுகளும்
வைத்திருக்கக் கூடாது.

பயனாளி
மிகவும் எளிமையாகவும், அவர்கள்
குடும்பத்தில் அரசுப்பணி
அல்லது கூட்டுறவுத் துறை
மற்றும் உள்ளாட்சி பதவிகளில்
இருக்கக் கூடாது.

இலவச கறவை
பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள்
வழங்கும் திட்டம் மற்றும்
ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தின் வெள்ளாடுகள்/ செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பயனடைந்து
இருக்க கூடாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 30% இருக்க
வேண்டும்.

மேற்கண்ட
தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அருகில்
உள்ள கால்நடை மருந்தகங்களிருந்து பெற்று உரிய
சான்றுடன் வருகின்ற 9ஆம்
தேதி மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular