HomeBlogஅடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

You can apply for housing in flats

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற
விண்ணப்பிக்கலாம்

தமிழக
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு
திட்டத்தின்கீழ், தருமபுரி
மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிப் பகுதியில் 272 குடியிருப்புகள், தருமபுரி
வட்டம், கொன்டகரள்ளி திட்டப்
பகுதியில் 280 குடியிருப்புகள், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை ஊராட்சியில் 608 குடியிருப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையனூா்
திட்டப் பகுதியில் 192 குடியிருப்புகள், நம்பிப்பட்டி திட்டப்
பகுதியில் 420 குடியிருப்புகள், அரூா்
பேரூராட்சிப் பகுதி,
அம்பேத்கா் காலனித் திட்டப்
பகுதியில் 912 குடியிருப்புகள், பீச்சான்கொட்டாய் திட்டப் பகுதியில்
504
குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த
வீடுகளுக்கான பயனாளிகள்
தோ்வு செய்யப்பட உள்ளதால்,
தருமபுரி மாவட்டத்தில் இத்
திட்டப் பகுதிகளுக்கு அருகில்
வசித்து வரும் பொதுமக்கள், குடும்பத் தலைவா், உறுப்பினா்கள் ஆதார் அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல்,
வாக்காளா் அடையாள அட்டை
நகல், வங்கிக் கணக்குப்
புத்தகத்தின் முதல்
பக்க நகல், குடும்பத்
தலைவரின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.
3
லட்சத்துக்கு குறைவாக
இருக்க வேண்டும். இத்திட்டங்களுக்கான வாரியத்தால் நிர்ணயிக்கப்படும் பயனாளி பங்கீட்டு
தொகை ரூ. 1.30 லட்சம்
முதல் ரூ. 1.52 லட்சம்
வரை வாரியத்திற்கு முன்பணமாகச் செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ,
நிலமோ இல்லை எனவும்
அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டேன் என்ற
உறுதிமொழி படிவம் சமா்ப்பிக்க வேண்டும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தருமபுரி
மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.
17 (
வெள்ளிக்கிழமை), தருமபுரி
வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச.18 (சனிக்கிழமை), பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச. 21 (செவ்வாய்க்கிழமை), அரூா்
வட்டாட்சியா் அலுவலகத்தில் டிச. 22 (புதன்கிழமை) காலை
10
மணி முதல் மாலை
5
வரை சிறப்பு முகாம்கள்
சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட திட்டப் பகுதிகளில் ஆதிதிராவிட இன மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடியிருப்புகள் வழங்கப்படும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!