தோட்டப் பயிர்
சேத இழப்பீடு பெற
விண்ணப்பிக்கலாம்
தொடர்
மழையால், தோட்டப் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு
பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.திருத்தணி
வருவாய் கோட்டத்தில் 650 விவசாயிகள், வெண்டை, கத்திரி, மிளகாய்,
சேம்பு, வாழை, பப்பாளி
போன்ற தோட்டப்பயிர்களை, 1,300 ஏக்கர்
பரப்பளவில் பயிரிட்டனர்.
கடந்த
15 நாட்களுக்கும் மேலாக
பெய்த கனமழையால், தோட்டப்பயிர்களில் மழை நீர்
தேங்கி, பயிர்கள் அழுகி
வருகின்றன. காய்கறி பயிர்கள்,
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதனால்
தோட்டப்பயிர்கள் பயிரிட்ட
விவசாயிகள் கடும் நஷ்டம்
அடைந்துள்ளனர்.திருத்தணி
தோட்டக்கலை துறை உதவி
இயக்குனர் கோமதி கூறியதாவது:திருத்தணி கோட்டத்தில், வடகிழக்கு
பருவ மழையால், 515 ஏக்கர்
பரப்பில் உள்ள தோட்டப்பயிர்களில் மழை நீர்
தேங்கி நிற்கிறது.
இதில்
380 ஏக்கர் பரப்பு பயிர்கள்,
மழையால் சேதம் அடைந்துள்ளன.பல்லாண்டு பயிருக்கு இரண்டரை
ஏக்கருக்கு, 18 ஆயிரம் ரூபாய்;
ஓராண்டு பயிருக்கு, இரண்டரை
ஏக்கருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய்
இழப்பீடு வழங்கப்படும்.
மழையால்
சேதம் அடைந்திருந்தால் கிராம
நிர்வாக அலுவலர் சான்று,
கணினி சிட்டா, அடங்கல்,
ஆதார் கார்டு, ரேஷன்
கார்டு, வங்கி கணக்கு
புத்தக நகல் போன்ற
ஆவணங்களுடன், தோட்டக்கலை துறை
அலுவலர்களிடம் விவசாயிகள் விண்ணப்பம் வழங்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

