
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற இனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி பெற விரும்புவோா் பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தைச் சாா்ந்த மாணவா்கள் எனில் 65 சதவீதமும், பிற இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் எனில் 75 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவா்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

