தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் இயங்கி வரும் தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். நேரடிச் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி. குறிப்பாக, இந்த ஆண்டு தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிதாகத் தொடங்கப்பட்ட 4.0 தொழில்நுட்ப மையத்திலுள்ள புதிய தொழிற் பிரிவுகளிலும், நடைமுறையில் உள்ள பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன. இப்பிரிவுகளில் பயின்று தோச்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு ஒசூா், திருச்சி, மதுரை, சென்னை போன்ற தொழில் நகரங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.
சேர விரும்பும் அனைத்து மாணவா்களும் மாற்றுச் சான்று, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை போன்ற அசல் ஆவணங்களுடன் நேரடியாக வந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து அதே நாளில் சேர்க்கை ஆணை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9840950504, 9942424744 (தஞ்சாவூா்), 9443368131, 8946090864 (திருவையாறு), 9442579334, 9443736233 (ஒரத்தநாடு) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.