Home Blog கோவை மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 31 வரை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

கோவை மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 31 வரை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

0

கோவை மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 31 வரை சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்!

கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.

நேரில் வருவோருக்கு, இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சியில் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும்.பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும்; புதுமைப்பெண்திட்டத்தில், அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். 

இலவச லேப்-டாப், சைக்கிள், சீருடை, தையல் கூலி, செருப்பு, பாடப்புத்தகம், வரைபட கருவிகள், 30 கி.மீ., துாரம் வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கு வளாக நேர்காணல் ஏற்பாடு செய்யப்படும்.விபரங்களுக்கு, 94990 55692, 88381 58132, 98651 28182 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version